பிரபாவும் மிதுவும் அன்று வாசு நிச்சையத்தன்று தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையை மறந்து அவர்களின் திருமணத்திற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தனர். மறுபுறம் தனது தங்கையின் திருமணத்திற்கும் தனது திருமணத்திற்குமான ஏற்பாடுகளை வாசு பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருந்தான்.
பிரபா மிதுவின் திருமண நாளிற்க்கு முன் நாள் ராகவ் பிரபா வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஆதவும் யாதவும் ராகவை கண்டதும் மாமா என்று வாசுவிடம் இருந்து இறங்கி ஓடினர்.
வாசு பிரபா மிது மூவரும் புன்னகையுடன் வரவேற்று உபசரித்தனர். பிரபாவின் தாயுக்கும் தந்தைக்கும் பிரபா ராகவை அறிமுகப்படுத்தி வைத்தான். அவர்களும் ராகவை புன்முறுவலுடன் அழைத்து உபசரித்தனர்.
"மாமா எங்கள இப்ப தான் உங்களுக்கு பாக்க தோனுச்சா" என்று யாதவ் ராகவை பாவமாக பார்த்தவாறு கேட்க "உங்கள போய் நா மிஸ் பன்னாம இருப்பனா டா நா உங்கள ரொம்பவே மிஸ் பன்னன் டா" என்று ராகவ் கூற
"அப்பறம் ஏன் இத்தனை நாள் எங்களை பார்க்க நீங்க வரல" என்று ஆதவ் கேட்க "ஹோட்டல்ல கொஞ்சம் அதிகமா வேலை இருந்துச்சு டா அதான் இப்போ வந்துட்டன் இல்ல பாருங்க நா உங்களுக்கு பிடிச்ச ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்திருக்கன்" என்று ராகவ் ஐஸ்க்ரீமை எடுத்து கொடுக்க இருவரும் குஷியாக அதை வாங்கி உண்ண தொடங்கினர்.
"டேய் எனக்கு கொஞ்சம் கொடுங்க டா" என்று வாசு அவர்களை வம்பிலுக்கும் நோக்கிலே கேட்க "உங்களுக்கெல்லாம் இல்லை உங்களுக்கு இரண்டு நாள்ல கல்யாணம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டா கோல்ட் வந்திரும் சாப்பிட கூடாது" என்று ஆதவ் கூற
"ஏன் உங்களுக்கு கோல்ட் வராதா" என்று வாசு கேட்க "ம்ஹும் ஸ்ராங்க் பாடி எங்க அப்பா மாதிரி" என்று யாதவ் கூற பிரபா மிது ராகவ் மூவரும் புன்னகையுடன் அவர்களின் கலாட்டாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
"இப்ப நீங்க எனக்கு ஐஸ்க்ரீம் தரலனா நா உங்களுக்கு என் பொண்ண கல்யாணம் பன்னி வைக்க மாட்டன் டா" என்று வாசு கூற "அட போ மாம்ஸ் நா ராகவ் மாமா பொண்ண கட்டிக்கிறன்" என்று யாதவ் கூற "ஒருத்தன் தான அவன் பொண்ண கல்யாணம் பன்னிப்பிங்க இன்னொருத்தன் இருக்கானே" என்று ஆதவை பார்த்து கூற
YOU ARE READING
கண்மணியின் காதலை தேடி
Romanceகாதல்!..... கண்ணுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குள் எறிந்திடும் சுகமான வலி!..... கனவுகளை அடைந்திட கை கொடுக்கும் தன்னம்பிக்கை ..... வெற்றி தோல்வியை சமமாய் பங்கெடுக்கும் பாதி உயிர்..... அளந்திட முடியா நேசம் கொண்ட ஆழி.... மூச்சு முட்டேனும் மூழ்கிட துடிக்கும்...