தேடல் - 14

384 26 2
                                    

பிரபா மிது கழுத்தில் மாங்கல்யம் கட்ட போக "நிறுத்துங்க" என்று கத்தியவாறு ஒருவன் முன் வந்தான். அனைவரும் யார் என்று தெரியாமல் குழம்பி இருக்க மிது அதிர்ந்து மணமேடையில் இருந்து எழுந்து நின்றாள். பிரபாவும் அவள் பின்னே எழுந்து நின்றான்.

"ஏன் பா யார் நீ இப்படி நல்ல காரியம் நடக்கும் போது முன்ன வந்து அபசகுணமா நிறுத்துங்கன்னு சொல்ர" என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க "மணமேடையில இருக்க பொண்ணோட குழந்தைங்களுக்கு அப்பன்" என்று அவன் நக்கலாகவும் அதே சமயம் திமிராகவும் கூற அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.

மிதுவும் முகம் வேர்க்க துவங்கி இருக்க பிரபாவையும் வாசுவையும் மாறி மாறி பார்த்தாள். கூட்டம் எங்கும் சலசலப்பு கேட்க துவங்கியது.

"டேய் யார் டா நீ திடீர்ன்னு வந்து என் தங்கச்சி குழந்தைங்களுக்கு அப்பான்னு சொன்னா நா நம்பிருவனா உண்மைய சொல்லு யார் உன்னை அனுப்பனது என் தங்கச்சி வாழ்கைய கெடுக்க யார் இப்படி பன்ன சொன்னது" என்று வாசு கோவமாக புதியவனின் சட்டையை பிடித்து உலுக்கி கேட்க பிரபா மேடையில் இருந்து இறங்கி வாசுவிடம் சென்றான்.

வாசு எவ்வளவு உலுக்கியும் பதில் கூறாமல் புன்னகையுடனே இருந்தவன் "நீங்க இப்படி கோவமா கேட்டாலும் அடிச்சி கேட்டாலும் உண்மை அத தான் சொல்வன்" என்று கூற பிரபாவின் நேற்றைய பயம் இன்று நிஜமாவதை எண்ணி கலங்கியவாறு மிதுவை பார்த்தான்.

மிதுவால் பிரபாவின் முகத்தை பார்க்க இயலாமல் போக உடனே அவன் அருகில் சென்று அவன் கை கோர்த்துக் கொண்டாள். பிரபாவிற்கு மற்றொருவனின் மனைவி என்ற எண்ணம் மிது கையை விலக வைத்தது.

"யார் டா நீ உன்னை நா முன்ன பின்ன பார்த்ததில்லை எதுக்கு என் வாழ்கைய அழிக்க பாக்கற" என்று மிது கேட்க ஆதவும் யாதவும் மிது காலை வந்து கட்டிக் கொள்ள மிது இருவரையும் காலோடு அணைத்துக் கொண்டாள்.

"இவங்க தான் நம்ம பசங்களா மிது எவ்வளவு வளர்ந்துட்டாங்க நா குழந்தையா பார்த்தது" என்று அவன் ஆதவ் யாதவை நோக்கி கையை நீட்ட மிது இருவரையும் அவளுக்கு பின் நிறுத்திக் கொண்டு "இங்க பாரு நீ யார்னே தெரியல வீணா என் பசங்க மேல கை வைக்காத ஒழுங்கா இங்க இருந்து போயிடு" என்று மிது மிரட்டலாக கூறினாள்.

கண்மணியின் காதலை தேடிWhere stories live. Discover now