வாசு தாரணியின் திருமணம் முடிந்து விட மணமக்களை வாசு வீட்டிற்கு அழைத்து சென்றனர். இருவரையும் ஓய்வெடுக்க வெவ்வேறு அறைக்கு அனுப்பப்பட்டனர்.
மாலை வாசுவையும் தாரணியையும் தயார் செய்து முதலிரவு அறைக்குள் விட்டனர். பிரபா வீட்டிலும் பிரபா மிதுவை ஒரு அறையில் விட்டு விட்டு ஆதவ் யாதவை சாரு அவள் அறைக்கு அழைத்து சென்று விட்டாள்.
பிரபா மிது அருகில் அமர்ந்து மெதுவாக மிது முகத்தை அவனை நோக்கி திருப்ப மிது முகத்தில் அத்தனை வெட்கம் செம்மையாக சிவந்திருந்த மிதுவின் கன்னங்களை பற்றிய பிரபா மிது இதழை நோக்கி குனிய சரியாக அவன் கைப்பேசி சினுங்கியது.
பிரபா கடுப்புடன் அதை எடுத்து வாசு எண்ணை கண்டதும் இன்னும் காண்டாகி விட்டான். "ஏன் டா கரடி உனக்கு கால் பன்ன நேரம் காலமே இல்லையா" என்று கடுப்பாக கேட்க
"நானா டா கரடி என்னை தான் டா ஒரு கரடி டிஸ்ட்ரப் பன்னிச்சி" என்று வாசு சோகமாக கூறினான்.
"உன்னை யாரு டிஸ்ட்ரப் பன்னா" என்று பிரபா கேட்க
"நானே காலம் கடந்து காத்திருந்து இப்ப தான் என் காதலிய கல்யாணம் பன்னி அவ கைய புடிக்க போனன் அப்பன்னு பார்த்து இந்த கரடி வந்து எங்க இரண்டு பேருக்கும் நடுவுல உட்காந்து எங்களுக்கு வச்சிருந்த ஸ்வீட் பழம் எல்லாம் சாப்டுட்டு இருக்கு" என்று வாசு கூற
"அடச்சீ இப்ப உன் காதல் வரலாறு எல்லாம் யார் கேட்டது அந்த கரடி யார்ன்னு மட்டும் சொல்லு" என்று பிரபா கேட்க
"வேற யாரு உன் செல்ல தங்கச்சி ரிக்ஷி தான் அவ கல்யாணத்தை பத்தி அவங்க அப்பா கிட்ட பேசனுமாம் இல்லனா எங்கள சேர விட மாட்டாளாம்" என்று வாசு சோகமாக கூற அப்புறம் பிரபாவும் மிதுவும் சிரிக்க தொடங்கினர்.
"சரி மச்சி ஆல் தி பெஸ்ட் நீ அவள சமாளிச்சி அனுப்பிரு நா வைக்கிறன் பாய்" என்று பிரபா கூற வாசு "டேய் டேய் வச்சிராத டா எனக்கு ஹெல்ப் பன்னு டா" என்று கெஞ்ச பிரபா "நா கட் பன்னி ரொம்ப நேரம் ஆச்சி" என்று கூறியவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
ESTÁS LEYENDO
கண்மணியின் காதலை தேடி
Romanceகாதல்!..... கண்ணுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குள் எறிந்திடும் சுகமான வலி!..... கனவுகளை அடைந்திட கை கொடுக்கும் தன்னம்பிக்கை ..... வெற்றி தோல்வியை சமமாய் பங்கெடுக்கும் பாதி உயிர்..... அளந்திட முடியா நேசம் கொண்ட ஆழி.... மூச்சு முட்டேனும் மூழ்கிட துடிக்கும்...