பிரபா மிது ஆதவ் யாதவுடன் உள்ளே செல்ல போக பிரபாவின் தாய் "அங்கேயே நில்லு" என்று அந்த வீடே அதிரும்படி கத்த ஆதவும் யாதவும் துள்ளி விழுந்தனர். அவர்கள் மட்டும் அல்ல அங்கிருந்த மிது பிரபா வாசுவிற்கும் தூக்கி வாரி போட்டது.
பிரபாவும் வாசுவும் ஆதவிற்கும் யாதவிற்கும் தட்டி கொடுத்தனர். "அம்மா பசங்க தூங்கறாங்க" என்று பிரபா மெல்லமாக பல்லை கடித்துக் கொண்டு கூற "அவ குழந்தைங்கள நீ ஏன் டா தூக்கி வச்சிருக்க அவ கூடவே அவ பிள்ளைங்களையும் இங்க இருந்து அனுப்பிட்டு நீ மட்டும் உள்ள வா" என்று பிரபாவின் தாய் கோவமாக கூற "என்ன சத்தம்" என்று கேட்டவாறு பிரபாவின் தந்தை வெளியில் வந்தார்.
"அம்மா எதா இருந்தாலும் காலையில பேசிக்கலாம் இப்ப போய் தூங்குங்க" என்று பிரபா கூற "காலையில என்ன டா காலையில என் முடிவு காலையிலையும் இதான் இவ இங்க இருக்க கூடாது ஏன் இவள கட்டிகிட்டு இவளுக்கு குழந்தைய கொடுத்தானே அவன் எங்க அவன அடிச்சி துரத்திட்டு கூட்டிட்டு வந்துட்டியா" என்று பிரபாவின் தாய் கூற யாதவ் சினுங்க பிரபா அவனிற்கு தட்டி கொடுத்தான்.
"அம்மா சத்தம் போடாத பசங்க எழுந்துருவாங்க" என்று பிரபா கூற மிது பிரபாவின் தாய் அவளை உள்ளே செல்ல விடாமல் தடுத்த போதே அழுக தொடங்கி இருந்தாள்.
"டேய் பிரபா என்ன டா இது கல்யாணம் ஆகி குழந்தை இருக்க பொண்ண கூட்டிட்டு வந்திருக்க அவ புருஷன் எங்க" என்று பிரபாவின் தந்தை கேட்க மூவரும் அமைதியாகவே இருந்தனர்.
"அவங்க வாய திறக்க மாட்டாங்க வசதியா என் பையன் போய் கூப்ட்டதும் அவ புருஷன தூக்கி போட்டுட்டு வந்திருப்பா நம்ம பையனும் பொண்டாட்டி மேல இருந்த பாசத்துல அவ சத்தியத்த நிறைவேத்த கூட்டிட்டு வந்துட்டு இருப்பான்.... ஏன் டா வாசு நீயுமா டா இதுக்கு உடந்த நல்லத சொல்ல மாட்டியா டா அவனுக்கு" என்று பிரபாவின் தாய் என்ன நடந்தது என்றே கேட்காமல் அவர்களாகவே ஓர் யூகத்தை நினைத்து கூற வாசுவிற்கும் பிரபாவிற்கும் ஐய்யோ என்றிருந்தது.
YOU ARE READING
கண்மணியின் காதலை தேடி
Romanceகாதல்!..... கண்ணுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குள் எறிந்திடும் சுகமான வலி!..... கனவுகளை அடைந்திட கை கொடுக்கும் தன்னம்பிக்கை ..... வெற்றி தோல்வியை சமமாய் பங்கெடுக்கும் பாதி உயிர்..... அளந்திட முடியா நேசம் கொண்ட ஆழி.... மூச்சு முட்டேனும் மூழ்கிட துடிக்கும்...