1

372 10 4
                                    

விழிமொழி: 1

“மா.. என்னால முடியல மா. உங்க சந்தோஷத்துக்குனு நினைச்சி இப்ப பெரிய தப்பு செய்வது போலிருக்கு மா, என்னை உங்களுக்கு பாத்துக்க கஷ்டமாயிருந்தா அனாதை ஆசிரமத்தில சேர்த்திடுங்க" என தன் இயலாமையை நினைத்து கலங்கினாள் இமையா.

‘தன்னால் தனியாக எழுந்து நிற்க கூட வழியில்லாத போது இந்த திருமணம் தேவையான ஒன்றா? எதுக்கு என்னை என் பெற்றோருக்கு பாரமாக்கிவிட்டாய்’ என்று தன் மனதால் கடவுளிடம் சண்டைக்கு நிற்கத்தான் தோன்றியது.

ஆனால் அந்த கடவுளிடம் மட்டுமல்ல யாரிடமும் அவளுக்கான பதிலில்லை. “என்னால எதும் செய்ய முடியாத நிலையில் இருக்கோம் இமை. அப்பா முகமே சரியில்லை. என்னத்தான் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்க நினைத்தாலும் அவருக்குள்ளும் வலி இருக்கு மா புரிஞ்சிக்கோ. எங்களை விட மாப்பிள்ளை உன்னை கண்ணும் கருத்துமா பாத்துப்பார். கொஞ்சம் சிரிச்ச முகமா இரு கண்ணு" என்று இமையாவின் அம்மா உடைந்த குரலில் சொல்லிவிட்டு செல்ல,

“கண்ணுப்போல...எப்படி பாத்துப்பான்னு நானும் பார்க்கத்தானே போறேன்" என அவளை திருமணம் செய்ய இருப்பவனை மனதில் நிறுத்தி 'உன்னை நான் படுத்துர பாட்டுல ஓடிப்போக வைக்கிறேன் பாருடா. நீ என்ன பெரிய தியாகியா? என்னை உயிரா நினைச்சவனையே அடித்து விரட்டிய வீர மங்கைடா.. நீ எல்லாம் எனக்கு பிஸ்கோத்து டா மடப்பயலே! என்னோட ஒரு நாள் கூட உன்னால வாழ முடியாது. கை, கால் நல்லா இருக்கும் போதே நான் டெவில். இப்ப சொல்லவாவேணும். என் உடல் நலம் வேணும்னா ஊனமா இருக்கலாம் என் விஷம் தடவிய நாக்கு உன்னை சும்மா விடாதுடா’ மனதில் ஒரு பெரிய பட்டிமன்றத்துக்கு பேசுவது போல ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தாள்.

பெண்ணை அழைத்து செல்ல கதிரின் கார் வந்து நின்றது. இமையாவையும் அவள் குடும்பத்தையும் ஒரு காரில் அனுப்பிவிட்டு, கதிர் அவனது நண்பனின் காரில் முன்னே சென்றான்.

மண்டபத்தில் அனைத்து சொந்தங்களும் மணமக்களுக்காக காத்திருந்தது.

உன் விழிமொழி...நானடி!Where stories live. Discover now