3

77 8 4
                                    

பார்வை: 3

கதிர் இமையாவை தனது வீட்டுக்கு அழைத்து கிளம்ப,  இமையாவின் மனதும் கதிரின் மனதும் சில நாட்கள் முன்னோக்கி நகர்ந்தது.

அனைத்தும் பொய்த்து போனது, இவளின் முட்டாள் தனமான செயலால்.

ஒரே ஒரு உறவு, கஷ்டத்தையும்  சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நம்ம அனைவரையும் நினைத்தது தவறு. மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்தால், உறவு நீடிக்கும். எப்போ பாரு எனக்கு இந்த கஷ்டம் அந்த கஷ்டம்னு சொல்லிட்டு இருந்தா உறவில் விரிசல் விழத்தான் செய்யும். அப்படி பிரிந்தது தான், என் காதல். என் மன அழுத்தத்தின் மொத்த பாரத்தையும் வெறுப்பையும் அவன் மீது நெருப்பாக கக்கி, அவனை கொஞ்சம் கொஞ்சமாக என் அனல் தெறித்த வார்த்தையால்  கசக்கிவிட்டேன்.

பலமணிநேரம் தொடர்ந்தது தொலைபேசி பயணம்.  ஆரம்பித்தது அந்த பக்கமாக  இருந்தாலும் தொடர்ந்தது நான் தான்.

இனிமையான நேரங்கள் அனைத்தும் மறைந்திருந்தது இந்த சில மாதங்களில்.

எனக்கு மனநிலை கொஞ்சம் சரி இல்லை. டாக்டரிடம் போய் பாத்தாலும் எதுமே இல்ல,  நார்மல்னு சொல்லிட்டாங்க. என்னுடைய மன அழுத்தம்… எங்களின் உறவை பாதிக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் அவனிடமிருந்து கொஞ்சம் இல்ல நிறையவே விலகி இருந்திருப்பேன்.

இவ்ளோ ப்ராப்ளம் அப்பவும் நான்தான் அதிகம் பிரச்சனை செஞ்சேன். அவனும் வருட கணக்காக நான் செய்த அதிகாரத்தில் அடங்கித்தான் போனான். ஆனால் ஒரு நாள் பொங்கிவிட்டான். அவனது வார்த்தைகளும் அனல் கக்கியது.

நான் அவனை மூன்று வருடங்களாக அடிமையாக வைத்திருந்தேன் என்று அவன் உதிர்த்த வார்த்தைக்கு சக்தி அதிகம் போல. கூர்மையான கத்தியை கொண்டு என் நெஞ்சை குத்தி கிழித்தது.

நான் செய்வது தவறு என்று புரிந்தது. இருந்தும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனை தேடிட்டு இருந்தேன். எனக்கான அன்பு பாசம் அவனிடமிருந்து தான் வேண்டும் என்ற ஒரு பிடிவாதம். ஒரு எல்லைக்கு மேல போய் நான் கேட்டே விட்டேன் எனக்கு உன்னிடமிருந்து கேர் கிடைக்காதா? என்று. நான் எவ்வளவு துரதஷ்டசாலி… கேட்டும் கிடைக்கவில்லை பல முறை.

உன் விழிமொழி...நானடி!Where stories live. Discover now