2

87 8 2
                                    

விழிமொழி: 2

அழகி மனதில் ‘கதிர் வந்தால் தான் சரிவரும்’ நினைத்தவர் பக்கத்திலிருக்கும் ஒரு சிறுமியிடம்  கதிரை அழைத்துவர சொல்லிவிட்டு  அவனுக்காக காத்திருந்தார்.

உள்ளே வந்தவன் யாரும் சொல்லாமலேயே அங்கு நடக்கும் நிலைமையை புரிந்து கொண்டான்.

“அத்தை மாமா கொஞ்சம் வெளியே நில்லுங்க" என சொன்ன கதிர் கதவை தாழிட்டான்.

“இனி.. இப்ப என்ன பிரச்சனை..?” என்று கதிர் கேட்க, அவன் நிற்கும் திசையை கூட திரும்பி பார்க்காமல் பேச துவங்கினாள்.

“கொஞ்சம் நீங்க புரிஞ்சிக்கோங்க. நான் வேண்டாம் உங்களுக்கு… எதுக்கிந்த பிடிவாதம். நல்லா தான இருக்கிங்க. உங்களுக்கு ஊனமில்லாத நல்ல பொண்ணு கிடைப்பா" என இமையாவின் குரல் உடைந்து வெளியே வர, என்னதான் மனதில் உள்ள பாரம் இமையாவை அழுக தூண்டினாலும், அவளின் கண்ணீர் பொக்கிஷத்தை இமை சிறையிலிருந்து கீழ் விழாமல் பாதுகாத்தாள் இமையா.

கதிருக்கு அவளின் மன வருத்தம் புரிந்தது. அவன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவன்

“சரி… நான் என்ன செஞ்சா இந்த கல்யாணம் நடக்கும்?”

கதிர் பிடிவாதமாக திருமணத்தை எப்படி முடிப்பது என்ற முனைப்பிலேயே நின்றிருந்தான்.

இருவரின் பிடிவாதத்தில் யார் பிடிவாதம் அதிகம் என்று பார்ப்போம் என நின்றனர்.

“நான் என்ன சொல்லிட்டிருக்கேன்னு புரியலையா? இல்லை காது கேட்கலையா?” ஆத்திரத்தில் எரிந்து விழுந்தாள் இமையா.

“இப்ப கல்யாணம் நிறுத்த முடியாது. அத்தை மாமா பத்தி நினைச்சிப்பாரு" கதிரின் வார்த்தைகள் அழுத்தமாக தெறித்தது.

“என்னால முடிலயங்க.. நான் யாருக்கும் பாரமாயிருக்க கூடாதுன்னு பார்க்கிறேன்” இமையா சொல்ல.

“நீ எனக்கு பாரமில்லை. உன் அப்பா போல இல்லை என்றாலும் ஒரு அளவுக்கு உன்னை பார்த்துக்க என்னால முடியும். உடல் ஊனத்தைவிட மனதில் ஊனமிருப்பது தான் தவறு. அந்த வகையில் நீ எங்களோட தங்கம்" கதிர் சொல்லும் போது, இமையா இடை மறித்து,

உன் விழிமொழி...நானடி!Where stories live. Discover now