8

69 6 3
                                    

விழிமொழி: 8

ஒரு வாரம் இருவரின் வாழ்வும் எந்த  மாற்றமும் இல்லாமல் சென்றது. இமையா கதிரை திட்டுவது குறைந்திருந்தது.

சில முறை பக்கத்து வீட்டு பெண் சக்தி வந்து இமையாவை சீண்டிப்பார்க்க,
“எனக்கு எதும் அப்ஜக்சன் இல்லை மா. உங்க கதிர் மாமாவை தாராளமா கட்டிக்கோ” என்று சாதாரணமாக கூறினாள்.

கதிருக்கு கோபம் வந்தாலும் ‘கதிர் டென்ஷன் ஆகாத, பாவம் அவள் நிலையிலிருந்து பாரு. இந்த உலகின் வண்ணத்தை பார்த்து சிறகில்லாமல் பறந்த தேவதையை ஒரு இருட்டில் பிடித்து அமர வைத்தால் என்ன நிலையோ? அது தான் இங்கு இமையாவின் நிலை.

சிறுவயதில் இருந்து பார்வை இல்லாதவர்கள் கூட தங்கள் வாழ்வை அந்த இருட்டின் அமைதியை வளரவளர பழகிக் கொள்வர்.

ஆனால் புதிதாக ஏற்பட்ட இந்த இழப்பிலிருந்து மீண்டு வர சிறிது காலம் தேவைப்படும். இந்த இருட்டும் அவளுக்கு பழகிவிடும். அதுக்கு உதவியாக எதாவது செய்ய வேண்டுமே! நாள் முழுவதும் இந்த கதையை கேட்டு கேட்டு தூங்க வேண்டியது. எப்படி தான் இவளால் இப்படி தூங்க முடியுதோ... எனக்கு எல்லாம் மதியம் தூங்கினால் அன்று இரவு சிவ ராத்திரி தான்’

என்ன தான் நஞ்சு தடவிய வார்த்தைகளை உதிர்த்தாலும் இமையா செய்வது அனைத்தும் கதிருக்கு அறியாத குழந்தை செய்யும் தவறு போல்தான் தெரிந்தது.

அதிகப்படியாக அவள் பேசுவது கூட  பொறுத்துக்கொண்ட கதிரால், இமையாவின் இந்த ஒரு வார அமைதியை ஏற்கவே முடியவில்லை.

கதிருக்கு உள்ளவே அடைந்திருப்பது, ஏதோ போலிருக்க “இமையா பக்கத்தில் ஒரு பார்க் இருக்கு போலாமா?”

“இல்லை” என்பது போல மறுப்பாக தலை அசைக்க

“சரி.. ஸ்டோரி போட்டு தரட்டா கேட்டுட்டிருக்கியா? நான் போய்  பஜ்ஜி சுட்டு எடுத்துவறேன்”

“ம்ம்…” என்றவள் விட்ட கதையை கேட்க ஆரம்பித்தாள்.

திடீரென கண்ணில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களை தேய்த்து பார்க்க, இமையாவுக்கு கண்கள் கூச்சமாய் இருந்தது.  உத்து உத்து பார்க்க, மங்கலாக சில பொருட்களின் நிழல் தெரிந்தது.

உன் விழிமொழி...நானடி!Where stories live. Discover now