6

54 6 2
                                    

விழிமொழி: 6

வண்டி வீட்டை அடைந்துவிட்டது என்பதை அறிவுருத்தியது வண்டியின் குழுங்கல். அந்த திடீர் அசைவில் கனவுலகிலிருந்து மீண்ட இமையா தனது கைகளை காற்றில் தூலாவினாள்.

"எங்கே இருக்கோம்... வந்துட்டோமா?" இமையாவின் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது.

கதிருக்கு இமையாவின் இந்த பதற்றம் மனதை பிசைந்தது. 'எப்படி பட்டாம்பூச்சியாக சிறகடித்த இவளது வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே. இவளது பேசும் கண்களில் ஒளி வந்தாலும் சரி வராமலிருந்தாலும் சரி. இந்த நீங்காத இருளையும் அவளை ரசிக்க வைக்க வேண்டும்'

"நம்ம வீட்டுக்கு வந்துட்டோம் இமை" இறங்கியவன் மறு புறம் சென்று, இமையா இறங்க உதவி செய்வதற்காக அவளது தோள்களை தொட.

"பொறுக்கி தொடாதே.. கண்டவன் எல்லாம் வந்து என்னை தொட கார்ப்பரேசன் பைப்பா நான்" அளவுக்கு அதிகமாக காய்ந்த எண்ணையில் படும் தண்ணீர் போல எரிந்து விழுந்தாள்.

'கதிர் ஆரம்பமே அமோகமா தொடங்குதேடா' சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

இவள் இவ்வளவு பேசியும் அமைதியாக இருந்த கதிரும் சளைக்காமல்

"தொடக்கூடாதுன்னு நீ அக்ரிமென்டில் போடல இமை குட்டி" அவளது பொன் கன்னங்களை தட்டி வம்படியாக அவளது தோள் தொட்டு காரிலிருந்து இறங்கியவன்,
அவளை வாசலில் நிற்க வைத்தான்.

ஆரத்தி கரைத்து எடுத்துவரும் பக்கத்துவீட்டு பெண்மணி,
"கதிர் தம்பி இரு. நான் வந்து இரண்டு பேருக்கும் ஆரத்தி எடுக்கிறேன்"

"என்னக்கா நீங்க? ஆசையா என் அழகு தேவதைக்கு சுத்தி போடலாம்னு நினைச்சா இப்படி வந்து கெடுக்குறிங்க"

"உன் ஆசைக்கெல்லாம் அப்புறமா சுத்திப்போட்டுக்கோ. முதல் ஆரத்தி தனியா எல்லாம் எடுக்கக் கூடாது" என்று கதிரின் கையிலிருந்த ஆரத்தி தட்டை பிடுங்கிக்கொண்டது, பக்கத்து வீட்டு காமாட்சி அக்கா.

கதிரை இமையா பக்கம் நிறுத்திவிட்டு ஆரத்தி எடுக்க துவங்கினார்.

உன் விழிமொழி...நானடி!Where stories live. Discover now