1

545 31 9
                                    

இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்க பூமியான கோயம்புத்தூர் மாவட்டத்தில் அழகிய சிறு கிராமமான மதுக்கரை என்னும் சிற்றூரில் இரண்டுமாடி வீட்டில் மேல் தளத்தில் முதல் அறையில் இன்று தனது நிச்சயதார்த்ததிற்கு ஆடை அலங்கார ஒப்பனை செய்து கொண்டிருந்தாள் நம் சிறுகதையின் நாயகி மஹதி....

" அக்கா இப்பவே உனக்கு கல்யாண பொண்ணோட களை வந்துருச்சுக்கா...அம்புட்டு அழகா இருக்கிற க்கா " என்ற தன் சித்தி மகள் ரேவதி சொல்லுக்கு முகம் முழுக்க நாணத்தால் சிவந்து தலை குனிந்தாள் மஹதி

" மஹி... மஹி... ரெடி ஆயிட்டியா கண்ணு " என்றவாறு அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த மஹியின் அம்மாவோ தன் மகளின் அழகை ரசித்து விரலை மடக்கி அவள் முகத்திற்கு நேரே சுற்றி போட்டவள் விரலில் சொடக்கு சத்தம் அடுக்கடுக்காய் கேட்க

" எவ்ளோ பேரோட  கண்ணு பட்டுருக்கு என் தங்கத்துக்கு " என்றவாறே தன் கண்ணில் வைத்த மையில் விரலால் சிறிது எடுத்து மஹதியின் காதுக்கு பின்னே திருஷ்டிக்காக வைத்தவள் மாப்பிள்ளை வீட்டாரின் கார் சத்தம் கேட்க கீழே விரைந்து சென்றாள்

மாப்பிள்ளை வீட்டார்  ஹாலில் அமர்ந்திருக்க அறையை விட்டு வெளியே வந்த மஹதி அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் சொல்லி விட்டு நிமிர்ந்து மாப்பிள்ளையை பார்க்க அவனோ வைத்த கண் வாங்காமல் இவளையே பார்த்து கொண்டிருக்க வெட்க புன்னகையை உதிர்த்து விட்டு தலையை கவிழ்த்து கொண்டாள்

பின் மாப்பிள்ளையும் பொண்ணும் விரலில் மோதிரம் மாற்றி கொண்டனர்

தன்னவளின் மனம் தன் கண் முன்னே வேறோருவனுக்கு மாறி போவதை பார்த்த சூர்யாவின் கண்களிலோ ' இதோ இப்போது விழ போகிறேன் ' என்றபடி அவன் கண்ணுக்குள் குளம் கட்டி இருந்த கண்ணீர் அவன் கண்களிலிருந்து கண்ணத்திற்கு தாவி வழிந்தோடியது...

தன் கண்ணீர் குதித்ததை அறிந்த சூர்யா தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து கட்டம் போட்ட கர்சீப்பில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்து விட்டான்..

முதல் காதலே கடைசி காதலும் ❤️Where stories live. Discover now