தன் வருங்கால மாமியாருக்கு திவி , மாத்திரை எடுத்து கொடுக்க , இத்தனை நாட்களாக மாத்திரை சாப்பிட்டு அலுத்து போனவர், தன் மகன் இல்லாது, திவி தருவதால், அவளை ஏமாற்றி மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க நினைத்தார்.
" வாயெல்லாம் கசப்பா இருக்குடா.. எதுவுமே சாப்பிட முடியலே.., ஒருவேளை நான் டேப்லேட் போடாம தூங்கிறேன்டா... என் குட்டிமா இல்லே..., என்ற அவரின் கொஞ்சலில் சரியென்று சொல்லி அவரை உறங்க வைத்து விட்டு வெளியே வர எதிரில் வந்த மஹி மீது மோதி நின்றாள் ..
"எங்கேடி ! அத்தே ரூம்ல இருந்து வர்ற.., என்ன மாமியாரே இப்பவே கைக்குள்ள போட்டுக்க ஐடியா பண்றீயா.., என மஹி கிண்டலடிக்க,
"போடி ! போ.. நான் இந்த வீட்டோட மகாராணி டி, நான் யாரையும் கைக்குள்ள போட வேண்டிய அவசியமில்லே... அத்தான் ஏதோ பேச்சுலர் பார்ட்டி வைக்குறதால நைட் வர லேட்டாகும். அதனால அம்மாவுக்கு டேப்லேட் கொடுத்து படுக்க வைக்க சொன்னாரு.., அதான் அத்தை ரூம்க்கு போனேன்.. "
"சரி !சரி .., எல்லாம் டேப்லேட்டும் கரெக்ட்டா குடுத்தியா டி " என மஹி கேட்க,
"பாவம்டி. !அத்தே.., டெய்லி மெடிசன் யூஸ் பண்ணுறதால வாயெல்லாம் கசக்குதாம் அதான் இன்னைக்கி ஒரு நாள் சாப்பிடாம படுத்துகிறேன்னு சொன்னாங்க.., நானும் சரின்னு வந்துட்டேன்.., " என்றதும் தன் அத்தை அறைக்கு சென்றாள் மஹி .
அவர் சாப்பிட வேண்டிய மாத்திரையை கையில் எடுத்தவள்.. " அத்தே ! எழுந்திரிச்சு இந்த டேப்லேட் சாப்பிட்டு படுத்துக்கோ.. " என்றதும் அவர் மறுக்க ,
உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா.., நீ என்ன சின்ன குழந்தையா.., இப்படி டேப்லேட் சாப்பிடாம இருக்க பொய் சொல்லிட்டு திரியுறே.., ஒழுங்கா சாப்பிட்டு உடம்ப தேத்துனா தான் திவி பண்ற கொடுமையை சகிச்சுக்க முடியும்.., அப்படி பண்ணாம சீக்கிரம் போய் சேர்ந்துடாத.. மருமக கிட்டே திட்டு வாங்காத மாமியார் சொர்க்கத்துக்கு போக முடியாது.., தெரியுமா,.., " என கண்ணடித்து சொன்ன மஹியை பார்த்து ,
YOU ARE READING
முதல் காதலே கடைசி காதலும் ❤️
Fanfiction" நான் செய்த தவறை மன்னித்து என்னை ஏற்க மாட்டாயா " என தன்னை காதலிக்குமாறு ஏங்கும் மஹியின் மாமன் மகன் சூர்யா ... அந்த காரியத்தை இவ்வளவு சின்ன வயதிலே செய்ய வேண்டுமானால் நீ எல்லாம் ... ச்சீ ... " என்று வெறுத்து ஒதுக்கும் சூர்யாவின் அத்தை மகள் மஹதி...