இன்னும் திருமணத்திற்கு 5 நாட்களே இருக்க , திருமண ஜவுளி எடுக்க கோயமுத்தூர் SPB ஜவுளி கடைக்கு கிளம்பினர் .
மஹி வர மறுக்க , தன் தங்கை, அன்னையின் வற்புறுத்தலுக்கு உடன் சென்றாள் .
பட்டுப்புடவை பிரிவுக்கு சென்றவர்கள் நிச்சயம், நலங்கு , முகூர்த்தம் என அனைத்து விழாக்களுக்கும் தனித்தனியே புடவை எடுக்க ஆரம்பித்தனர் .
அதிக நேரம் செலவு செய்து திவி , சூர்யா இருவரும் இணைந்து இளம் சிவப்பு நிறத்தில் முகூர்த்த புடவை எடுக்க , மஹி அங்கே அமர முடியாமல் தவித்தாள்.
அவள் மனதில் அந்த இளம் சிவப்பு புடவை எதையோ சொல்ல , அவள் கண்கள் அவளையறியாமல் சூர்யாவை நோக்கி சென்றது .
அவன் திவியுடன் வெகு இயல்பாக பேசி கொண்டிருந்தான் ...
அதன் பிறகு மஹியால் புடவை தேர்வு செய்ய முடியாமல் போனது .
ஆனால் அவள் கண்களோ தனியே எடுத்து வைத்திருந்த அந்த முகூர்த்த புடவை மேல் தான் பதிந்திருந்தது .
திவி மஹியை உலுக்கி , மறுவீட்டுக்கு புடவை தேர்வு செய்ய சொல்ல , அவளும் சோர்ந்த மனதுடன் அதை பார்த்து கொண்டிருக்க அவள் சித்தி , விற்பனை பெண்ணிடம் , " ஏனுங்க !.. இந்த அட்லே முகூர்த்தம் , சங்கீத் , ரிசப்சன்ன்னு ஒவ்வொரு பங்சனுக்கும் தனித்தனியா புடவை இருக்குன்னு சொல்றீங்களே... ஆனா பர்ஸ்ட் நைட்க்கு சொல்லமாட்றீங்க... அது மாதிரி பர்ஸ்ட் நைட்க்கு புடவை வந்து இருக்கா .. " என சித்தி கேட்டதை கேட்ட மஹி விழிவிரித்து ,
" ஏன் சித்தி .. ! ஏன் .., கடைக்கு வரும்போது மூளையை வீட்டுலே வச்சுட்டு வந்துட்டீயா .., பர்ஸ்ட் நைட்க்கு இப்படி சேரி கேட்குற .., அசிங்கமா இல்லை .., என திட்ட
" ஏய் ! திவி தான்டி எல்லாத்துக்கும் புடவை கட்டி கேட்டா .., " என சொன்னதும்
டிசைனர் புடவை பிரிவுக்கு சென்றவள் 2000 ரூபாயில் சாண்டல் கலரில் மெல்லிய புடவையை எடுத்து திவியிடம் கொடுத்தாள் .
YOU ARE READING
முதல் காதலே கடைசி காதலும் ❤️
Fanfiction" நான் செய்த தவறை மன்னித்து என்னை ஏற்க மாட்டாயா " என தன்னை காதலிக்குமாறு ஏங்கும் மஹியின் மாமன் மகன் சூர்யா ... அந்த காரியத்தை இவ்வளவு சின்ன வயதிலே செய்ய வேண்டுமானால் நீ எல்லாம் ... ச்சீ ... " என்று வெறுத்து ஒதுக்கும் சூர்யாவின் அத்தை மகள் மஹதி...