அர்ஜூன் மஹியை தனியாக மொட்டைமாடியில் அழைத்துவந்து பேசினான் .
மஹி ! என்னடி எங்கிட்டே மறைக்குறே .... சொல்லுடி ... , சூர்யாவை கண்டாலே எரிச்சுவிழுறவே ... , மார்னிங் சூர்யாவை விழுந்து விழுந்து கவனிச்சே ... , பைக் கீயே கொடுக்குறே ... , சூர்யாவை ஒரு ஏக்கமா பாக்குறே .... எல்லாத்துக்கும் என்ன அர்த்தம் .... " என்க
" ஒன்னுமில்லேடா .... நேத்துவரைக்கும் மாமா பையன் மட்டும்தான் ... ஆனா நாளையிலேருந்து எங்க வீட்டு மாப்பிள்ளை .... அதான் மரியாதே தரேன் ... " என பொய் சொல்ல ,
" ஓ மேடம் எங்கிட்டே பொய் சொல்லக்கூட ஆரம்பிச்சிடீங்க ... நான் உனக்கு தேர்ட் பெர்சனா போயிட்டேன் இல்லே .... எங்கிட்டே இனி பேசாதே , " என்றதும் ஏற்கனவே காதல் பிரிவின் வலியை அனுபவித்துக் கொண்டிருப்பவள் , நட்பின் பிரிவையும் தாங்க முடியாமல் மௌனமாக நின்றாள் .
" நீ சூர்யாவை காதலிக்கிறீயா டி ... , " என்பதற்கு மௌனமே பதிலாக கிடைக்க ,
" கேட்குறேன்லே .... சொல்லுடி .. , நீ அவனே விரும்புறியா ... , ஓ .. திவியோட லைப்பே எண்ணி உன் காதலே மறைக்குறே .... , சரிடி நான் இப்போவே சூர்யா கிட்டே போய் உண்மையே சொல்லி இந்த மேரேஜ்ஜே ஸ்டாப் பண்ணுறேன் ... என கிளம்பியவன் ,
" அப்படி நடந்தது இந்த மஹியை உயிரோட பாக்க முடியாது .... செத்துபோயிடுவேன் ... " என்றதும் அங்கேயே நின்றான் .
" அர்ஜூ சூர்யா என் பின்னாலேயே வந்தே போது அவன் காதலே நான் கொஞ்சம் கூட மதிக்கலே .. , ஆனா அவன் காதல் உண்மையானது தான் .... அதான் அவன் காதல் எனக்கு கனவா வந்து புரிய வைச்சது .... அதுக்கு நான் மதிப்பு கொடுத்த போது அது என்னே விட்டு போனதையும் உணர்த்தியது ... அவன் காதல் எவ்வளவு உண்மையானது இல்லே அர்ஜூன் ... அவன் காதலே நான் உணரும் போது அது வேறொருத்திக்கு சொந்தமா போயிடுச்சு ..... இனி நான் அதுலே உள்ளே போக முடியாது டா .... திவியாலே இப்படி பேசுறேன்னு நினைக்காதே ... , எந்த பொண்ணா இருந்தாலும் இப்படிதான் பேசியிருப்பேன் அர்ஜூ . , ஏன்னா அந்த வேதனையே நான் அனுபவிச்சு இருக்கேன் .... என்னாலே அதே வேதனையே இன்னொரு பெண்ணுக்கு தர முடியாது டா ..... என்னாலே என் சூர்யா காதலே நினைச்சி வாழ முடியும் ... " என்ற மஹியின் உறுதியை கண்ட அர்ஜூன் வியந்து நின்றான் .
YOU ARE READING
முதல் காதலே கடைசி காதலும் ❤️
Fanfiction" நான் செய்த தவறை மன்னித்து என்னை ஏற்க மாட்டாயா " என தன்னை காதலிக்குமாறு ஏங்கும் மஹியின் மாமன் மகன் சூர்யா ... அந்த காரியத்தை இவ்வளவு சின்ன வயதிலே செய்ய வேண்டுமானால் நீ எல்லாம் ... ச்சீ ... " என்று வெறுத்து ஒதுக்கும் சூர்யாவின் அத்தை மகள் மஹதி...