இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் . வீட்டு காம்பவுண்ட் வாயிலில் மூங்கில் கொம்பின் ஓரத்தில் நவதானிய பொட்டலம் மஞ்சள் துணியில் கட்டப்பட்டு , மாவிலைகள் கட்டி , வெட்டப்பட்ட குழியில் உறவுகள் மஞ்சள் தண்ணீர் , பால் ஊற்றி , இறைவனை வேண்டி முகூர்த்த கால் நடப்பட்டது .
பின்னர் மாங்கல்யம் செய்வதற்கு உறவுகள் சுற்றியிருக்க , பெண்ணை பெற்றவர் என்ற முறையில் மஹியின் தந்தை முதல் மொய்யாய் பத்தாயிரம் ரூபாய் வைக்க , பொற்கொல்லரிடம் பூ பழம் வெற்றிலை வைத்து கொடுக்க செல்லும் பாக்கு இல்லாதததை கவனித்த , பாலா மஹியை அழைத்து எடுத்துவர சொல்ல , அவளும் ஓடிச்சென்று எடுத்துவரும் போது , அப்போதுதான் திருமணத்திற்கு வந்த சூர்யாவின் அன்னையை பெற்ற அன்னை , மஹியை தடுத்து நிறுத்தினார் .
" உனக்கு தானே எட்டுமாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு ... , ஏதாவது விசேசமா .... " என தன் நிலை அறிந்து கேட்ட பாட்டியை முறைத்த மஹி
" ம்ம்ம் ... பையன் பொறந்து , நேத்துதான் பீரிகேஜி சேர்ந்து விட்டிருக்கேன் ... ஸ்கூலேயிருந்து வந்ததும் காமிக்கிறேன் ... " என்றவள் , வெளியே செல்ல முயல ,
" உனக்கு சூசகமா சொன்னா புரியாது ..... என் பேரனே இப்போதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுயிருக்கான் .. , உன்ன மாதிரி கல்யாண மேடைவரை போயி கல்யாண நின்னு போன ராசி கெட்டவே முன்னாடி நின்னு செஞ்சா விளங்குனே மாதிரி தான் .... கல்யாணம் முடியுற வரைக்கும் கொஞ்சம் தள்ளி நில்லு ... " என சூடுஞ்சொற்களை சொல்ல , அனைத்திற்கும் துடுக்குதனமாய் பதில் சொல்லும் மஹியால் எதுவும் பேச முடியாமல் தனதறைக்கு சென்று பால்கனியில் நின்றக் கொண்டாள் .
" எவனோ ஒருவனின் கோழைத்தனத்திற்கு தான் இன்னும் அசிங்கப்பட வேண்டியிருக்கிறது " என நினைத்தவள் மனது தன் கனவில் வந்த அரவணைப்பை இப்போது வேண்டுமென ஏங்கிய விழிகள் மூடி கொண்டாள் .
அங்கு அனைவரும் இருந்தும் பாக்கு எடுக்க சென்ற மஹி வராமல் வேறு சிறுமியிடம் கொடுத்து அனுப்பினாள் .
YOU ARE READING
முதல் காதலே கடைசி காதலும் ❤️
Fanfiction" நான் செய்த தவறை மன்னித்து என்னை ஏற்க மாட்டாயா " என தன்னை காதலிக்குமாறு ஏங்கும் மஹியின் மாமன் மகன் சூர்யா ... அந்த காரியத்தை இவ்வளவு சின்ன வயதிலே செய்ய வேண்டுமானால் நீ எல்லாம் ... ச்சீ ... " என்று வெறுத்து ஒதுக்கும் சூர்யாவின் அத்தை மகள் மஹதி...