💙❤️💙 காதலை💞 தேடி..💙❤️💙
K💞M Part -9
வீட்டுக்கு வந்த கதிர் சாப்பிட்டு முடித்து....தன் அறைக்கு வந்ததும், பீரோவை திறந்து... நாளைக்கு காலையில என்ன Shirt போடலாம் என்று யோசித்தான்...
அவளுக்கு என்ன கலர் பிடிக்கும்..... என்று யோசித்தவன் ... அன்று அவள் Blue Color சுடிதார் தான் போட்டிருந்தாள்...
சரி Blue கலர் Shirt போட்டுட்டே போலாம்.. என்று எடுத்து வைத்தான்...அண்ணா... அப்பா கூப்புடறாரு...
இதோ.... வரேன்... என்று பீரோவை மூடி வைத்து ஹாலுக்கு வந்தான்..
என்ன...ப்பா.....கூப்பிட்டீங்க..
கையில என்ன Invitation ..தனம் மாமியாரோட அண்ணன் பொண்ணு கல்யாண invitation..டா இன்னைக்கு தான் கூரியர் ல வந்துச்சு...
வர்ற Sunday தான் கல்யாணம்...அதான் எப்டி போலாம்னு பேசிட்டு இருந்தோம்...
சனிக்கிழமை சாயந்திரம் Reception...
மறுநாள் முகூர்த்தம்...
2 க்குமே நாம அங்க இருக்கணும்... அதான் உன் தோது எப்டி னு கேக்கலாம்னு தான் கூப்பிட்டேன்..நீங்க 3 பேரும் போய்ட்டு வாங்கப்பா.. நான் வரல.. சனிக்கிழமை எனக்கு ஆபீஸ் வேலை இருக்கு... அது தவிர்க்க முடியாது..
டேய்!" தனம் எல்லாரையும் கண்டிப்பா வர சொன்னாடா..
நான் அக்கா கிட்ட....
பேசிக்கிறேன் மா.....சரி விடு லட்சுமி...அவன் தான் வேலை இருக்குனு சொல்றான் ல விடு..
நாம போய்ட்டு வந்துடலாம்...அப்புறம் கதிர்.... Sunday எங்காச்சும் வெளிய போற வேலை வச்சிருக்கியா???...
இல்லப்பா ஏன்??
அது மாடி Portion வாடகைக்கு விடலாம்னு முடிவு பண்ணி பேப்பர் ல Add குடுத்து இருக்கேன்... ஞாயிற்று கிழமை பேப்பர் ல வருது ....
Land line no தான் கொடுத்து இருக்கேன்...
Phone வந்துச்சுனா...
Note பண்ணி வை...
நேர்ல வரவங்களுக்கும் வீட்ட காட்டு... தேவ பட்றவங்க யார் என்னனு விவரம் மட்டும் குறிச்சிக்க...
நான் வந்து முடிவு பண்ணிக்கிறேன்...