mv...92to 97

63 8 7
                                    

🔱யின் ❤மீண்டும் வருவேன் ❤9️⃣2
🌹இதுவும் காதல் தான் 🌹296
❤🌹🌹❤❤❤🌹🌹❤❤❤🌹🌹❤

அழகன் அன்று வருணின் முகமுடியில் இருக்கும் ஸ்ரீமந்த் தேவகோட்டைகுள் நடக்கும் சம்பவத்தை
சொன்னதாக இன்று சொல்லிக்கொண்டு இருக்கும் சமயம் இவர்கள் இருக்கும் வீட்டின் வாசலில் ஒரு கார் வந்து நிறக்க...அந்த காரில் இருந்து சித்ரா சாம்ராஜூம் அவரின் அண்ணன் டாக்டர் ஜாஸ்டினும் உள்ளே நுழைந்தவர்கள் அழகனை பார்த்ததும்...

ஜஸ்டின் : அழகா எப்படி இருக்க

அழகன் : வாங்க ஜஸ்டின் நான் நல்லா இருக்கேன் சித்து எப்படி இருக்கீங்க

சித்ரா சாம்ராஜ் : ம்....நான் உங்க மேல செம கோவத்துல இருக்கேன்

அழகி : அப்போ நீங்க என் மச்சான்னை அடிக்கப் போறீங்களா

சித்ராசாம்ராஜ் : இல்ல உன் மச்சானுக்கு பதில் உன்னை அடிக்க போறேன்

அழகி : ஐயோ என்னை அடிக்க போறீங்களா..... ஏன்

சித்ரா சாம்ராஜ் : ஏன்னா நீ இன்னும் சின்ன குழந்தையாகவே இருக்க ...ம்.. எங்கேயோ போய் ஒரு காட்டுப் பகுதியில உட்கார்ந்துகிட்டு இத்தனை வருடம் நாங்க எல்லாம் இருக்கிறோம் என்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்து இருக்கிற இல்ல.... ஏன் எப்படியாவது எங்களை நீ காண்டக்ட் பண்ணி இருந்தால் என்னைக்கோ நம்ம குடும்பம் ஒன்று சேர்ந்து இருக்குமே

குட்டி : இல்ல பெரியம்மா அம்மாவுக்கு எந்த ஒரு நிகழ்வும் சிறிது காலம் ஞாபகத்தில் இல்லை.. அதுக்கப்புறமா அவங்க ஒவ்வொரு விஷயமாக சொல்லும் பொழுது தான் நானே நம் குடும்பத்தில் இருப்பவர்களை பற்றி தெரிந்து கொண்டேன்.. ஆனால் நாங்க இருந்த சூழ்நிலை எங்களால ஒரு போன் கூட பண்ண முடியாது... நான் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து
உங்கள யாரையாவது தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தாலும் அம்மாவை அந்த இடத்தில் தனியாக விட்டுவிட்டு வர என்னால முடியல... நாங்கள் சூழ்நிலைக் கைதியாக தான் இருந்தோம்..

அழகன் : என்ன பண்ண சொல்ற சித்து... நாலும் தெரிந்த நானே என்னை வருத்திக் கொண்டு சிறையில் அப்படித்தானே இருந்தேன்....

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now