20. அம்மு ராணி

15 0 0
                                    


அத்தியாயம் 20:-

காலைப் பொழுது சோகமாகவே விடிந்தது வனிதாவிற்கு. கட்டிலில் படுத்து கிடந்தவள் எழ மனமில்லாமல் படுத்திருந்தாள். தன் நிலைமையை எண்ணி கண்ணீர் வடித்தாள். தன் படிப்பும் கெட்டு தன்மேல் தந்தைக்கு இருந்த நம்பிக்கையும் போய்... நினைக்க நினைக்க கொலைவெறி வந்தது தன் அக்காமேல். அவள் மட்டும் இப்படி ஒரு காரியத்தை செய்யாமல் இருந்தால் தனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்து இருக்காது என்று நினைத்தாள்.

காந்திமதி வந்து, "எழுந்திரிச்சு வா வனிதா. இப்படி படுத்து கிடக்குறதால உங்க அப்பா அவரு முடிவை மாத்திக்க போறாரா என்ன? குளிச்சிட்டு வா. உனக்கு டீ போட்டு வைக்கிறேன்" என்று கூறி அடுக்களைக்கு சென்றார். 

கேசவன் வெளியே சென்று இருக்க  காந்திமதி வனிதாவுக்கு டீ போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்க, கதவை திறக்க வெளியே வந்தார். அதற்குள் குளித்துவிட்டு வந்த வனிதா கதவை திறந்தவள் அதிர்ச்சி அடைந்தாள். 

வனிதா அதிர்ந்து நிற்பதை கண்ட காந்திமதி யோசனையுடன் வெளியே வந்து பார்க்க, அங்கு நின்று இருந்தவனை கண்டு அவரும் அதிர்ந்தார். ஆம்! செழியன் தான் வந்திருந்தான்.

முதலில் சுதாரித்த காந்திமதி, "உள்ள வாங்க தம்பி" என்று அழைக்க, "ம்ம் " என்று தலை அசைத்தவன் உள்ளே சென்றான். வனிதா ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் செழியனை கண்டதும் கோவம் அதிகமாக தன் அறைக்கு சென்று கதவை டம் என்று அடித்து சாத்தினாள். அதிலேயே அவளின் கோவம் செழியனுக்கு புரிந்தது.

காந்திமதியிடம், "மாமா வீட்ல இல்லையா அத்த" என்று வினவினான்.

"வெளிய போய் இருக்காங்க. இப்ப வந்துருவாங்க. நீங்க உக்காருங்க தம்பி. நான் போன் போட்டு பாக்குறேன்" என்று அங்கிருந்த சோபாவை காட்டி கூறியவர்  போனை கையில் எடுக்க, சரியாக கேசவன் உள்ளே நுழைந்தார்.

அமரப் போன செழியன் அவரை கண்டதும் எழுந்து நின்றான். கேசவனுக்கு அவனிடம் பேச விருப்பம் இல்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவனை அதுவும் தன் மகளின் கணவன் வேறு, அதனால் அவனிடம் பேசினார்.

தகிக்கும் இளங்காற்றே...Onde histórias criam vida. Descubra agora