21. மேகலா தேவராஜன்

9 0 0
                                    

அத்தியாயம் 21:-

மஞ்சள் அரைத்து, குங்குமத்தில் குழைத்தது போல், அந்தி மாலை வேளையில் மின்னிக் கொண்டிருந்த ஆதவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தகி.. இல்லை ரசித்துக் கொண்டிருந்தாள் என்று கூற வேண்டுமோ..! அவள் இதழ்களில் உறைந்திருந்த புன்னகை அவள் அதனை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்று பறைசாற்றி கொண்டு இருந்தது..

ஆண்களுக்கு மட்டும் தான் நிலவினில் தன்னவளின் முகம் தெரியுமா என்ன..?. பெண்களுக்கும் வெய்யோனின் வெம்மையில் தன் மனம் கவர்ந்தவன் முகம் தெரியும் என்பதற்கு சான்றாக அதனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. மனம் அவளறியாமலேயே வெய்யோனோடு, தன் மனதை வென்றவனை ஒப்புமை பார்த்துக் கொண்டிருந்தது..  அவனும்  இப்படித்தான்.. காலை கதிரவன் ஒளி நம் உடலுக்கு புத்துணர்வு அளிப்பது போல், அவனும் எப்பொழுதும் புத்துணர்வோடு இருப்பான்..

நண்பகலில் சுட்டெரிக்கும் சூரியனை போல்,  தன்னை எதிர்த்து நிற்பவர்களை, தன் பார்வையிலே சுட்டெரிக்கும் சூரியன் அவன், கண்களுக்கு குளிர்ச்சி தரும் அந்திமாலை ஆதவன் போல், இதோ இப்பொழுது தன் மனதிற்கு நெருக்கமாகி அவனின் நினைவு இதம் தருகிறதே..” என்று தன் போக்கில் நினைத்துக் கொண்டிருந்த நந்தகிக்கு சட்டென்று அந்த எண்ணம் மின்னல் வெட்டியது போல் மின்னி மறைந்தது,

“எனக்கு அந்த வில்லனோட நினைப்பு இதம் தருகிறதா..!” ஆச்சரியமும், வியப்புமாக, மனதில் கேட்ட கேள்விக்கு, “ஆம்” என்று அழுத்தமான பதில் இன்னொரு மனது கொடுக்க, நந்தகி தனக்குத் தானே வியந்தாள்.. 

“நான் அந்த தண்டல்காரனை விரும்பறேனா..? அவன் மேல் எனக்கு காதலா..? பணத்திற்காக என்னை கடத்தி சென்றவன் மீது காதலா..? இது எப்படி சாத்தியம்..? இது என்ன முரண்பாடு..!? தன்னை நினைத்தே வியந்து கொண்ட நந்தகிக்கு மனம் ஏனோ அவள் உணர்ந்த காதல் கசக்கவில்லை.. மாறாக கற்கண்டாக தித்தித்தது..

“எல்லாவற்றிலேயும் அடாவடி செய்பவன், தன் மனதிற்குள்ளும் அடவாடியாக நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்ததை எண்ணி வியந்தாள்.. இளா..! இது எப்படி நடந்தது.. என் அனுமதி இல்லாமல் எப்படி நீ என் மனசுக்குள்ள வரலாம்..?” மனதில் அவனோடு செல்ல சண்டையிட்டு, “நான் வச்சிட்டு வந்த புக்கை பார்த்திருப்பானா..? இல்லையா..? அப்படி பார்த்திருந்தாலும் நான் வைத்திருந்த குறிப்பு புரிந்திருக்குமா இல்லையா..? என்று குழம்பிக் கொண்டு இருந்தாள்..

தகிக்கும் இளங்காற்றே...Donde viven las historias. Descúbrelo ahora