3. காவியா செங்கொடி

15 3 0
                                    

அத்தியாயம் 3:-


"ஆஆஆ..... அய்யோ அம்மா எலி!!" அந்த காலை அவளுக்கு எலி முகத்தில் தான் விடிந்தது .

அவள் பயந்தாளோ என்னவோ நந்தகியின் அலறலில் எலி பறந்துவிட்டிருந்தது .

அந்தச் சிறு உருவம் கண்ணைவிட்டு மறைந்ததைக் கண்டவள், "ஸ்ப்பா... காலங்காத்தால மூஞ்சிக்கு முன்னாடி வந்து நின்னு இப்படி பயங்காட்டிருச்சே இந்த பிசாசு" என்று நிம்மதி மூச்சுடன் எழுந்தவள்...

"ஆ... அய்யோ ..... அம்மா....ஸ்ஸ்..." என்று உடலினை அங்கங்கே பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள் .

"அடேய் படுபாவி பயலே. இப்படி என்னைய கட்டாந்தரைல படுக்கவிட்டு கை கால் இடுப்பெல்லாம் புடுச்சுக்கிச்சே. ஸ்... யம்மா... தலையணையில்லன்னு மூட்டைல தலைய வச்சு கழுத்து வேற புடிச்சுக்கிச்சு .... ம்மா..." என்று புலம்பியபடி சென்றவள் காலைக் கடனை முடித்துக்கொண்டு மீண்டும் அறைக்கு வந்தாள்.

"யோசி டி நந்தகி.. யோசி.... என்ன பண்ணலாம்?? சாப்பாடு ஆர்டர் பண்ணக்கூட வழியில்லாம போயிடுச்சே...வயிறு இந்த கிள்ளு கிள்ளுது. நைட்டு நல்லாதானே சாப்பிட்டோம்...

ச்சை! பசிக்கும்னு தான் படிக்கிறதுக்குக்கூட நான் விடியக்காலைல எழுந்துக்க மாட்டேன். இந்த எலி வந்து மூச்சு மூச்சுன்னு மூஞ்சிக்கு முன்ன கத்தி எழுப்பிவிட்டிருச்சு. டீ, காஃபி எதாச்சும் தருவானுங்களா?" என்று நடைபயின்று கொண்டிருந்தவள் காருண்யாவின் வரவை உணர்ந்து நின்றாள்.

தேனீர்க் குவளையுடன் வருபவள் இவள் கண்ணிற்கு தேவதையாக தெரியாவிட்டாள் தானே ஆச்சரியம்!

அவள் தர வாங்கிக்கொண்டவள் அதன் நிறத்தைக் கண்டு, "என்னங்க இது!! கலர் வித்தியாசமா இருக்கு?" என்க..

"அது கருப்பட்டி காஃபிங்கக்கா" என்றாள்.

"ஓ... நைட்டு மூட்டைல தலை வச்சுப்படுத்தது எனக்கு கழுத்து புடிச்சுக்கிச்சு. ரொம்ப வலிக்குது. எதாவது மருந்து தருவிங்களா??" என்றாள்.

தகிக்கும் இளங்காற்றே...Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin