🎵🎶கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே...
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே...
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்...
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்...இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்...
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்...
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்...
செந்தாமரை செந்தேன் மழை...
என் ஆவி நீயே தேவி...ராஜ ராஜ சோழன் நான்...
எனை ஆளும் காதல் தேசம் நீதான்...
பூவே காதல் தீவே...🎵🎶
வானத்து இருளானது அன்று அதிகமாய் கருமை பூசி நின்றது. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் போட்டி போட்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்க, வான் அவன் அதனை தனக்கு சாதகமாக்கி தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டான்.
பாடல்கள் ஒரு பக்கம் மனதை வருடினாலும், அவள் சிந்தனை அந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட பெருகி நின்றது. நாள் முழுவதும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த சிரிப்பு, அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.
அவ்விருட்டிய இடத்தினில் எங்கிருந்து தான் வந்தனவோ, அந்த விட்டில் பூச்சிகள். பறந்து அவளிடம் வந்து அடைக்கலமாக, வைர வளையல்களாக மின்னின அவளது அழகிய கைகள்.
அழகிய அந்த பெரிய கண்களை, இயற்கையே கண் வைத்திடுமோ என்ற அச்சத்தில், காலையில் அவள் தீற்றிருந்த மை கலைந்து திருஷ்டி பொட்டானது.
நீண்ட நெடிய பின்னப் பட்டிருந்த அவளது ஆசை கூந்தல், காற்றின் திசைக்கெல்லாம் இங்கும் அங்கும் ஆடிக்கொண்டே இருக்க, பெண்ணின் வெண்டை விரல்கள் அதனை சுகமாக ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தது.
YOU ARE READING
அலைபாயுதே (Completed)
Romanceஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான். ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்...