அலை - 22

1.2K 35 12
                                    


கண் கூசும் வெளிச்சமும், காதினை கிழிக்கும் வெடி சத்தமும் ரசிகர்களின் ஆரவாரமும் இப்பொழுது தான் விடிந்த்தை போல் புத்துணர்ச்சியாக இருந்தது அந்த மைதானமே. 

இன்னும் உலக கோப்பையினை வீரர்கள் கை வசம் வந்து சேரவில்லை. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது என அஸ்வின் பரிசு மழையிலும் ரசிகர்களின் அன்பு மழையிலும் நனைந்தான். 

கேப்டனாக அஸ்வின் பேச வந்த பொழுது, "கொஞ்ச நேரம் முன்னாடி இந்த அஸ்வின் எங்க போயிருந்தார்?" 

ஆங்கிலத்தில் நடந்தது மொத்த உரையாடலும். அட்டகாசமாய் சிரித்த அஸ்வினின் சிரிப்பே அங்கிருந்த மொத்த கூட்டத்தையும் மீண்டும் பரவசப்படுத்தியிருந்தது. 

வர்ணனையாளர், "என்ன ஒரு அதிரடியான ஆட்டம், இந்த வேகம் எங்களோட ரன் டைனமைட்கிட்ட இருக்குனு தெரியும் ஆனா ஸ்ட்ராட்டஜிஸ் ஜஸ்ட் ஒண்டர்ப்புள், என்ன ரகசியம் இது?" 

"இது எதுவுமே யோசிச்சு பிளான் பண்ணி நடந்தது இல்ல, திடீர்னு மொத்த டீம் அமைப்பை மாத்தி குழப்பணும்னு மட்டும் தோணுச்சு. நான் எதிர்பாத்த மாதிரியே நடந்துடுச்சு. வேற எந்த ரகசியமும் இல்ல" 

வர்ணனையாளர், "உங்க அதிரடியான ஆட்டத்தோட காரணம்?" 

"ரெண்டு விஷயம். ஒன்னு... நாட்டுக்காக பார்டர்ல நின்னு சண்டை போட முடியல, என்னால பண்ண முடிஞ்ச விஷயத்தை கண்டிப்பா செய்யணும்னு நினைச்சேன். ரெண்டாவது முழுக்க முழுக்க சுயநலம், இந்த கப்ப உரிமையோடு கைல எடுக்கணும்" என்றான் உலகக்கோப்பையை பார்வையிட்டு. 

வர்ணனையாளர், "நீங்க குடுத்த சுதந்திரம் தான் திறமையை வெளிப்படுத்த உதவுச்சுனு எல்லா பௌலர்ஸும் சொல்றாங்க" 

"ஒரு கேப்டனா என்னோட கணிப்பு, வியூகம் என்னனு நான் அவங்களுக்கு  கைட் பண்ணிட்டேன், அதுக்கு மேல போட்டிய எடுத்துட்டு போனது அவங்க தான். தன்னோட பந்து எந்த மாதிரி ரியாட் பண்ணும்னு அவங்கள விட யாருக்கும் தெரியாது. அதுனால அவங்க வழில விட்டேன்" 

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now