அலை - 15

883 23 8
                                    


"நான் இங்கையே இருந்துக்குறேனே" 

"இல்ல கெளம்பிடு" 

"நாராயணா..." 

"எப்படி சொல்லி கூப்பிட்டாலும் இதே பதில் தான் ஆரூ. நீ அம்மா வீட்டுக்கு போய் தான் ஆகணும். அன்னைக்கு என்னமோ பேய் வீடுன்னு சொன்ன, இன்னைக்கு என்னவாம்?" 

தலையை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த கால்பந்து போட்டியிலிருந்து திருப்பி அவனுக்கு அருகே படுத்திருக்கும் மனைவி மீது பதித்தான். 

தான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் அவனை ஏதாவது செய்து சமாதானம் செய்யும் பாவனை ஒன்றை வைத்து உதட்டை பிதுக்கினாள். 

"சரி இங்கையே இரு. அம்மாகிட்ட நீ வர மாட்டனு சொன்னதா சொல்லிடறேன்" அவன் கையிலிருந்த ரிமோட்டை கோவத்தில் பிடுங்கி அவன் பார்க்காத ஒரு சேனலை வைத்துவிட்டு குப்புற படுத்துகொண்டாள். 

அவள் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியது. அன்று ஒரு பரபரப்போடு வெளியே சென்று வந்தது அஸ்வினுக்கு பிடித்துப்போக அதற்கு பிறகு அவனே அவளை இழுத்து வெளியே சுற்ற ஆரம்பித்துவிட்டான். 

அதுவும் அவளது இருசக்கர வாகனத்தில், ஹெல்மட் உதவியோடு. 

அந்த பழக்கத்தோடு அன்று இரவு இருவரும் அவர்கள் அறை இருந்த தளத்திலின் வரவேற்பறையில் இரவினை செலவழிக்க துவங்கிவிட்டனர். 

ஆளே இல்லாத வீட்டின் வரவேற்பறையில் அருகருகே படுத்திருப்பதும், கதவுள்ள அறையினுள் ஒரே கட்டிலில் படுத்திருப்பதும் அவளை பொறுத்தவரை வேறு வேறு தான். 

இதன் பொருள் ஒன்று தான் என அறிந்தாலும் ஆரோஹி அந்த லாஜிக் இல்லாத செயலை ஏற்க தயாராகவில்லை. அட முட்டாள் பெண்ணே இரண்டும் ஒன்றே என கூறி அந்த பிள்ளையை திருத்துவார் யார்? 

தெரிந்த ஒருவனும் அவளுக்கு அடிமையாகிவிட்டானே... எல்லாம் இந்த எஜமானி ஆட்சி தான் அவ்வீட்டில். 

இப்பொழுது கூட அவன் அடுத்தவாரம் போட்டிக்கு சென்ற பிறகு அவன் அன்னை வீட்டில் இருக்க அஸ்வின் கூற, பெண்ணோ ஒரே பிடியாக இங்கேயே இருப்பதாக கூறுகிறாள். 

அலைபாயுதே (Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin