எப்படியோ அவனோடு பிடிவாதம் பிடித்து வேறொரு அறையை வாங்கி வந்தாயிற்று. ஒரு வாரம் பொறுத்திருக்குமாறு கூறியவன், அதற்குள் அந்த அறையை அவள் விருப்பத்திற்கிணங்க மாற்றி தருவதாக, உறுதி கூறி வேறொரு அறையைக் காட்டினான்.
அவன் முன்பு காட்டியதை விட, மிகவும் சிறிய அறைதான் அது. ஆனாலும் ஒரு இதம் அவ்விடத்தில். கூட்டத்தினோடே இருந்து பழகி விட்டவளுக்கு, அமைதி கசந்தாலும் உறவென கூற சில மனிதர்கள்.
அறையின் ஜன்னல் கதவைத் திறந்து வைத்து, காற்றோட்டமாய் நின்று கண்களை மூடினாள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அந்த சூழலில் பொருந்தி வாழ்வது சவாலான காரியம்.
அதே நிலைதான் ஆரோஹிக்கும். அனைத்து சூழலிலும் பொருந்தி போனாலும், ஒரு மாதம் கூட பழகியிராத மக்களோடு ஒன்றிவிட்டது போல் நடிக்கதான் முடிந்தது.
ஆனால் ஏனோ திருமணம் முடிந்தபிறகு ஒரு மகிழ்ச்சி ஊற்று உள்ளத்தினுள். அந்நியமாய் தெரிந்த மக்கள் உறவாய், உயிராய் ஆன ஆர்ப்பரிப்பு.
அதிலும் அண்ணி, அண்ணி என அவளை பெரிய பெண்ணாய், உயர்ந்த பதவியில் வைத்திருக்கும் சித்தார்த், ரோஹி என மகளை போல் உரிமையாய் விரட்டி கெஞ்சி கொஞ்சும் மாமியார், அக்கறையை பார்வையாலே வழி நெடுக தொடர விடும் மாமனார், அனைத்திற்கும் மேல் எந்நேரமும் சிரிப்போடு ரசிப்பைக் கலந்து, அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொடுத்து, அதில் நிம்மதியடையும் அவளவன், வாழ்க்கை இனித்தது...
புதிய உறவாக மூன்று மனிதர்களை சம்பாதித்துவிட்டேன் என்கிற பேரின்பம் அவளுள். சுவற்றில் கண் மூடி சாய்ந்து மகிழ்ந்தவள் கண்களில் மகிழ்ச்சியின் துளிகள். இந்த அன்பு நிலைக்க வேண்டும் என்கிற வேண்டுதல், கண்ணீர் முத்துக்களாய் கன்னம் வருடியது.
நேற்று மனைவி உணவை ஊட்ட ஏங்கிய காரணத்தினால், அதற்கும் சேர்த்து ஒரு மணி நேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய சூழல் அஸ்வினுக்கு.
BẠN ĐANG ĐỌC
அலைபாயுதே (Completed)
Lãng mạnஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான். ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்...