தொடர்ந்து வந்தவண்ணமிருந்த அழைப்புகளை பற்களை கடித்து எடுக்காமல் வெறித்து அமர்ந்திருந்தார் ராகவ். அவர் எதிரில் பயத்தில் கையை பிசைந்த வாக்கிலே மதி அமர்ந்திருக்க, அவர்கள் புதல்வன் சித்தார்த்துக்கு தான் என்ன செய்வதென புரியவில்லை.
அஸ்வினுக்கு அத்தனை முறை அழைத்தாயிற்று, எடுக்காமல் பிடிவாதம் பிடிக்கிறான்.
திருமணத்திற்கு முன்பென்றால் ராகவ் நடவடிக்கையே வேறு, இப்பொழுது மருமகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
"மருமக எங்க?"
"தூங்கிட்டு இருக்கா ப்பா" என்றான் சித்தார்த்.
"நான் வேணும்னா அவளை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போகவா?"
"எவ்ளோ நேரம் மதி உண்மைய மறைக்க முடியும்? தெரிஞ்சு தானே ஆகணும். தெரியட்டும்" என்றார் ராகவ் கோவமாக.
"அஸ்வின் மேல தப்பிருக்காது ப்பா. இது என்ன அபீஷியல் நியூஸா இவ்ளோ ரியாக்ட் பண்றீங்க" தந்தை கோவத்தின் அளவு சிறிதும் பொருத்தமற்றது என தான் தோன்றியது.
"என் பையனை பத்தி எனக்கு தெரியாதாடா? அவன் அம்மாக்காக கல்யாணம் பண்ணாலும் அவனுக்காக மட்டும் தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கான். அப்டிப்பட்டவன் இந்த மாதிரி சின்ன பேச்சுக்கு கூட இடம் குடுக்க கூடாதுனு கோவம்" கோவம் அடங்காமல் தன்னுடைய தொடையில் கைகளை கொண்டு குத்துக்கொண்டே பேசினார்.
"இதுக்கு தான் விஷயத்தை வெளிய சொல்லி ஒரு பங்க்ஷன் வச்சிடலாம்னு தலைப்பாடா அடிச்சிக்குட்டேன். அடங்குறானா? எந்த விசியத்துலையும் என் பேச்சை கேக்குறதே இல்ல"
"நம்பிக்கை இருக்குறவர் ஏன் இப்டி பொலம்பணுமாம்?" மதி வாய்க்குள்ளேயே முணுமுணுக்க அமைதியாக இருந்த அந்த அறையில் அவர் பேசியது ராகவுக்கு கேட்காமலா போகும்?
"நம்பிக்கை மனசுல மட்டும் இருந்தா போதும்ல? இப்போ பாரு வர்ற ஒட்டுமொத்த போன் கால்ஸ்க்கும் நான் தான் பதில் சொல்லணும், என் பையன் அப்டி இல்ல இப்டி இல்லனு"
VOCÊ ESTÁ LENDO
அலைபாயுதே (Completed)
Romanceஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான். ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்...