அலை - 14

964 27 5
                                    

"ஆரூ எங்க தான்ம்மா இப்படி அவசரமா கூட்டிட்டு போற?" அவசரமாக கண்ணாடி பார்த்து தலை சீவியவனை, பொறுமை இல்லாமல் இழுத்துக்கொண்டிருந்தாள் ஆரோஹி.

அவளது இலுவைக்கு தகுந்தாற் போல் அவன் கைகளும் வர, சிகை அவன் எதிர்பார்த்தது போல் அடங்கவில்லை. சரி என ஜெல்லை எடுத்து அவசரமாக தடவினான்.

"அதெல்லாம் சொல்ல முடியாது, வாயா பேசாம..." என்றாள் இவள் கோவத்தில்.

"கொழுப்பு..." என்றவன் சட்டை பட்டன்களை போடப் பார்க்க, அவன் கையில் அடித்து அவன் செயலை நிறுத்தினாள்.

"பட்டன் போடாதீங்க, இது நல்லா இருக்கு." அவனை விட்டு இரண்டடி பின்னால் சென்று, அவனை தலை முதல் பாதம் வரை பார்த்தாள்.

கையில்லாத வெள்ளை பனியன், அதற்கு மேல் இளநீல நிற காட்டன் ஷர்ட். அதற்கு ஏற்றாற்போல் ஜீன்ஸ், வெள்ளை ஷூ அணிந்து பார்க்கவே கண்ணைப் பறித்தான். அதுவும் தான் பார்க்கும் பார்வைக்கு ஏற்றார் போல், தன்னை அளக்கும் அவன் கண்கள் பார்த்து தன்னையே மறந்தாள் ஆரோஹி.

எளிதாக அமையும் அடர் பழுப்பு நிற கண்மணிகள் தான். ஆனாலும் அதன் வசீகரம் அப்பப்பா...! அவனுக்கும் சேர்த்து அவை பேசிவிடும். அதனாலே ஆரோஹி அவன் கண்களைப் பார்ப்பதை தவிர்த்து விடுகிறாள். பிறகு உலகை மறந்து நின்று அவன் கேலி சிரிப்பை யார் வாங்குவர்?

"என்ன ஆரூ?" மெல்லிய சிரிப்போடு அவளைக் கேட்டவனுக்கு, அவள் நிலை புரிந்துதான் போனதோ, என்னவோ?!

சட்டென மீண்ட ஆரோஹி, "ச்ச! எவ்ளோ அழகான ஷர்ட்! உங்களுக்கு செட் ஆகல." போலியாக வருத்தப்பட்டாள் உதட்டைப் பிதுக்கி.

"செலக்க்ஷன் சரியில்ல, மாத்திடவா?"

"இருக்காதுல...? ஒரு ஷர்ட் முப்பதாயிரம், நாற்பதாயிரத்துக்கு எடுக்கிறவருக்கு இந்த ரெண்டாயிர ரூபாய் ஷர்ட் எப்படி புடிக்கும்? மாத்த எல்லாம் நேரமில்லை, டைம் ஆச்சு." அவன் கை பிடித்து மீண்டும் இழுத்தாள்.

"ஹே... பெர்ஃப்யூம் போடலடா..."

காலை அழுத்தமாய் தரையில் ஊன்றி, அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இருபதிற்கும் மேற்பட்ட வகையில் இருந்த, வாசனை திரவியங்களை அஸ்வின் குழப்பமாக பார்க்க, அதற்கு மேல் பொறுமையில்லாத ஆரோஹி, கைக்கு அகப்பட்டதை எடுத்து அவன் மேல் தாறுமாக அடித்து, வெளியே ஒருவழியாக இழுத்து வந்துவிட்டாள்.

அலைபாயுதே (Completed)Donde viven las historias. Descúbrelo ahora