அலை - 21

880 30 8
                                    


அது மருத்துவமனை என கூறினால் எவரும் நம்பவே மாட்டார்கள். அந்தளவிற்கு உற்சாகமும் கேலியாக காணப்பட்டது. நேரம் இரவு ஏட்டை தாண்டியும் எவருக்கும் பசி உறக்கம் வரவில்லை போல். காரணம் அங்கு கூடியிருந்த இளவட்டங்களால் தான். 

ஆரோஹி, சித்தார்த், மாறன், திவ்யா, வருண், ப்ரியதர்ஷன் (வருண் அத்தை மகன்) என ஒரே அமளிதுமளி தான். மாலை ஆறு மணிக்கு துவங்கிய அரட்டை, இன்னும் தொடர்கிறது. 

இடையிடையே ஆரோஹியின் ஆரோஹியின் ஆரோகியத்தை பரிசோதிக்க வந்த செவிலியர் கூட தயங்கி தயங்கி ஏதோ சொல்ல வந்து, பிறகு வெளியே பயத்தில் ஓடிவிட்டனர். 

மற்ற மனிதர்களாக இருந்தால் இந்நேரம் மிரட்டி முறைத்து கூட்டத்தை களைத்து விட்டிருப்பார்கள். இங்கோ மருத்துவமனையின் இளம் முதலாளிகள் இருவரும் உள்ளனரே, அவர்களை அசைத்து கூட பார்க்க இயலாதே. என்றையும் போல் அல்லாமல் இன்று அரை மணி நேரம் அதிகமாகியிருந்தது. 

"இவன் பண்ணத விடவா நீங்க பண்ணிட போறீங்க?" வருண் ஆரம்பிக்க, 

"டேய் வருணு" ப்ரியதர்ஷன் எச்சரிக்க, 

"சித்து அந்த பையன் வாய மூடு" ஆரோஹி கட்டளையிட, சித்தார்த் உடனே அதனை செயல்படுத்தியிருந்தான். 

"ஆஹ்..." சிரிப்போடு துவங்கிய வருண் இதழில் சிரிப்பு தாராளமாய் இருந்தது. 

"காலேஜ் லாஸ்ட் இயர் இருக்கும். அவன் லவ் புட்டுக்குச்சு. மனசு வலிக்கிதுடா வருணுனு ஒரே அழுகை. சரி பாவமேனு பார் கூடி போனேன். ரெண்டு பாட்டில் ராவா அடிச்சிட்டு ரோட்டுல அவன் வாட்டுக்கு புலம்பிட்டே நடக்க ஆரமிச்சிட்டான். 

எனக்கு பயம், இவனாட்டுக்கு வண்டில விழுந்து அடிபட்டு வந்தா வீட்டுல என் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவாங்க. என் நேரம் அன்னைக்கு ஒரு ஆள் முழு போதைல வண்டில முன்பக்க ஹாண்ட்பார் புடிச்சு பின்பக்கம் தள்ளிட்டு போறான். 

இந்த முழு போதை நாயி அதுல என்னத்த கண்டானோ அவன் குடிச்ச சரக்கு வேணும்னு நடு தெருல நின்னு ஒரே அதகளம் பண்ணிட்டான். நானும் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி பாத்தேன், அடங்கவே இல்ல" 

அலைபாயுதே (Completed)Donde viven las historias. Descúbrelo ahora