இன்று கவிதை தினம்! - 21 - 3 - 2018நாட்காட்டியில் தேதிகள் கிழிகிறது..
ஆண்டுக்கு ஒன்றாக
வயதும் கூடுகிறது....
வருவான் ராஜ்குமாரன்..
தருவான் வாழ்வென்று...
தாவணியில் ஆரம்பித்து...
சேலையில் தொடர்கிறது...
காலங்கள் கரைந்தோட..
கனவுகள் அதில் கலைந்தோட..
கழுத்தில் மூன்று முடிச்சுகள் விழ
கைநிறைய காசு கேட்கும் கல்நெஞ்சர்கள் மத்தியிலே...
கண்ணியமாய் கைப்பிடிக்க
யாரேனும் வரக்கூடுமோ என..
அவள் காத்திருக்கிறாள்...
முதிர் கன்னி !!