உன் விழிகள்
எனைத் தீண்டும்
நொடிகள் யாவும்..
அழகான உணர்வு!ஒவ்வொரு முறையும்
உன் விழிகள்....
புரியும் ஜாலங்கள்
அற்புத உணர்வு!விழிகளின் வழியே
நீ உரைக்கும்
மொழிகளில்..
ஆனந்த உணர்வு!மொழிகளற்ற
நம் விழிப்போர்
என்று முடியும்...
ஆர்ப்பரிக்கும் உணர்வு!இருவிழி மொழியில்
எனைத் தொலைத்து
என்னிலே...
உனை நினைத்து
சொல்லத் தெரியவில்லை...
அபமிரிதமான உணர்வு!