நிலவின் அழகை புவி ரசித்தது போதும் என்று எண்ணி ஆதவன், இந்த இரு காதல் ஜோடிகளையும் பிரிக்கத் தன் கிரகணங்களுக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தான்.. அதையறிந்த நிலவும் பூமியும் இந்தப் பிரிவுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தன.. அவர்கள் காதலுக்கு துணையாக இருந்த விண்மீன் நண்பர்கள் ஒவ்வொருவராக பிரியாவிடைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்...
அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நமது கதையின் நாயகி மீரா..மனதை அமைதியாக்கிக் கொள்ள அவளுக்கு உறுதுணையாக இருப்பது இந்த ஆகாயத்தை ரசிப்பது மட்டுமே.. மேகங்களின் வடிவங்கள் கூட அவளது மனதின் எண்ணங்களையே உருவமாய் காட்டுகின்றன என எண்ணி வியந்து வியந்து பார்ப்பாள்.. வானம் மட்டுமே என்றும் அவள் சளிக்காமல் பார்க்கும் உலக அதிசயம்..ஆனால் இன்று ஏனோ அவளுக்கு என்றும் கிடைக்கும் சிறுநிம்மதி கூட கிடைக்கவில்லை..
வாழ்நாளின் இறுதியை எண்ணிக் கொண்டிருக்கும் பாழடைந்த கட்டிடமே அவளின் இருப்பிடம்.. ஆனால் அதை விட்டால் அவளுக்கும் போக வேறு போக்கிடம் இல்லை...
அவளை நம்பியே அவளது மொத்தக் குடும்பமும் உள்ளது.. பெற்றவர்கள் அவளது இளம்பருவத்திலே இயற்கை எய்திட, மூத்தவளான அவளின் மீது குடும்ப சுமை விழுந்தது.. தனது தம்பியையும் தங்கையையும் பேணிக் காக்கும் பொறுப்புடன் தனது தாயின் மருத்துவ செலவுக்கு வாங்கிச் சென்றிருந்த 3 இலட்சம் பணத்திற்கு வட்டிக் கட்டும் பொறுப்பும் வந்து சேர்ந்தது.. அவளும் விதியை எண்ணி வருந்தாமல் அதன்போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறாள்.. இந்த ஓட்டம் எப்போது நிற்கும் என்று தெரியவில்லை...
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவளை
" மீரா நாளைக்கு ஷு வாங்க மாலுக்குப் போலாம்னு சொன்னியே.. கண்டிப்பா கூட்டிட்டு போவியா.. பிரண்ட்ஸ்லாம் கிழிஞ்ச ஷூனு கிண்டல் பண்றாங்க " என்று சோகமான முகத்துடன் சொன்ன தனது தங்கை நிலாவின் தலையை தடவியள் " கண்டிப்பா குட்டி.. நாளைக்கு உனக்கு ஷூவோட நியூ யூனிபார்ம்.. கலர் பென்சில்ஸ் எல்லாம் வாங்கலாம்.. ஆனா இப்ப சமத்தா ஷ்கூலுக்கு கிளம்புவியாம்.. அக்கா அதுக்குள்ள உனக்கு இடியாப்பம் செஞ்சுத் தருவனாம்.. " என்று கூறிவிட்டு அவள் முகத்தில் அழுந்த முத்தமிட்டாள்.." அக்கா நீ அவளுக்கு ஓவரா செல்லங் கொடுக்குற.. " என்று நறுக்கென்று நிலாவின் தலையைக் கொட்டினான் ராம்..
" டேய் போடா பொடலங்கா " என்று அவனைத் திருப்பி அடித்தவள் பாத்ரூமிற்குள் சென்று ஒளிந்து கொண்டாள்..
ராமும் நிலாவும் இரட்டையர்கள்.. அருகிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர்..நிலா இன்னும் குழற்தையாகவே இருக்க, ராமோ மீரா படும் பாட்டை உணர்ந்து தன்னால் முடிந்தளவு பகுதிநேர வேலைக்குச் சென்று வருவான்.. படிப்பிலும் படுசுட்டி.. ஆனால் நிலாவிற்கோ அந்த அளவுக்கு படிப்பு வராது.. தனது பணக்கார நண்பர்களுடன் தானும் போட்டிப் போட்டுக் கொண்டு உடைகள் அலங்காரப் பொருட்கள் வாங்க வேண்டும் என ஆசை கொள்வாள்.. ஆனால் ராமும் அதே வகுப்பில் படிப்பதால் அவளை அடிக்கடிக் கண்டித்துக் கொண்டிருப்பான்.
மீரா மாலை வரை ஒரு டெக்ஷ்டைலில்
டேட்டா என்ட்ரி வேலையை செய்து விட்டு 6 மணியிலிருந்து 10 மணிவரை அதே டெக்ஷடைலின் ஷோரூமில் சேல்ஷ்கேர்ளாக வேலை செய்து கொண்டிருந்தாள்..
இரண்டுமே வீட்டிற்கு அருகிலேயே இருந்ததால் அதிக சிரமமில்லை..இவர்களது வாழ்க்கை இவ்வாறு ஓடிக் கொண்டிருக்க நமது நாயகனோ எந்த விதக் கவலையுமின்றி தனது வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு கஷ்டம், வறுமை என்றால் என்னவென்று கூட தெரியாமல் அவர்களது பெற்றோர் அவனை செல்வசெழிப்பாக வளர்த்திருந்தனர்..
இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் தன் மேற்படிப்பை படித்துவிட்டு இன்று தான் தாய்நாடு திரும்புகிறான் நமது கதையின் நாயகன் கிருஷ்..வாழ்க்கை இவர்களை எவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைக்கிறதென்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..
Hi friends.. Ithu ennoda first story.. Unga comments vechutha en mistakes ah koraika mudiyum.. So unga comments ah share pannunga...
YOU ARE READING
முள்ளும் மலரும் (முடிவுற்றது)
RomanceHighest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும்...