முள்ளும் மலரும் 13

6.7K 216 39
                                    

மீரா அவனிடம் செல்வதா வேண்டாமா என அரை மனதுடன் யோசித்துக் கொண்டிருக்க அங்கே வந்த உதயை கவனிக்கத் தவறினாள்.
மேகாவும் மீராவை பார்வையால் எரித்து விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன ஆனாலும் இன்றுடன் ஒரு தீர்வு காண வேண்டும் என எண்ணி துணிந்து படியேறினாள். அவள் முதற்படியில் காலை வைத்ததும்
" அக்கா " என்றழைத்தான் ராம்.

" அக்கா எங்கபோற " என்ற கேள்விக்கு  என்ன பதிலளி்ப்பது கிருஷை சந்திக்க என்றால் அவன் தன்னை என்ன நினைப்பானோ எனத் தயங்கினாள்.

அவள் தயக்கத்தைப் பார்த்ததும் " அக்கா நீ போய்ட்டு வந்து என்னனு சொல்லுக்கா..இப்படி நீ என்னைப் பார்த்து பயப்படாத கஷ்டமா இருக்கு..  " என்று சொன்னதும் மீண்டும் தன் தம்பியின் பண்பினைப் பார்த்து பிரமித்துப் போனாள்.

மீரா தனது பின்னால்தான் நிற்கிறாள் என்பதை திரும்பாமலே உணர்ந்த கிருஷ் " சாட்சியும் சந்தர்ப்பமும் எதிரா இருந்தா யாரைப் பத்தி வேணா தப்பா நினைச்சிடுவல்ல மீரா " என்று அவன் சொன்னதும் " சும்மா வளவளன்னு இழுக்காத டக்குனு சொல்லு.. நாங்க சீக்கிரம் வீட்டுக்குப் போகனும் " என்றதும் முகம் சுறுங்கியவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.. அவன் சொல்ல சொல்ல பழைய நினைவுகள் அவள் மனதில் கருப்பு வெள்ளைப் படங்களாக தோன்ற தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்தாள்.. அவளை அந்த நிலையில் பார்த்ததும் மனம் கலங்கியவன் அவளக்கு தண்ணீர் தர, அதைப் பருகியவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

அவன் பதறி அடித்துக் கொண்டு மருத்துவரான தனது அண்ணி கவிதாவை அழைத்து மீராவினை பரிசோதிக்க செய்தான். அதிகப்படியான மன உளைச்சலால் வந்த மயக்கம்தான் என்பதை உறுதிப் படுத்திய கவிதா அவளை தனது அறையில் ஓய்வெடுக்க அழைத்துச் சென்றார்.
இதையனைத்தையும் குடும்பத்தார் அனைவருக்கும் தெரியாமல் இருவரும் பார்த்துக்கொண்டனர்.

ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மீராவின் அருகில் அமர்ந்தவன் மீராவின் கடந்த காலம் பற்றி எண்ணத் துவங்கினான்.

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now