முள்ளும் மலரும் 8

7K 219 20
                                    

மீரா காலையில் எழுந்து தயாராகக் குளியலறை சென்ற போதே கிருஷ் வீட்டிற்குள்ளே வந்தான்..
அவன் வந்ததும் ராம் " ஏய் ஒரு தடவை சொன்னா உனக்குப் புரியாதா.. வெளிய போயிடு "  என்று மிரட்ட,

" சின்னப் பசங்கனா சின்னப் பையன்மாறி தான் நடந்துக்கனும் ராமசாமி.. " என்று ராமின் கையை பின்னாடி வளைத்துப் பிடித்தான்.

" என் பேரு ஒன்னும் ராமசாமி இல்ல.. "என்று அவன் அந்த வலியிலும் கூற , " ஓ அப்போ ராம மூர்த்தியா " என்றதும் அப்போது அங்கே வந்த நிலா அதைக் கேட்டு சிரித்துவிட்டாள்

அது ராமுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்த " டேய் கைய விடுடா " என்று கத்தினான் அதற்குள் 2 3 வேலையாட்கள் வந்து வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துச் சென்றனர். 

அதுவரை பொறுமையாக இருந்த நிலாவும் " ஏன் இப்படி அராஜகம் பண்றீங்க.. அவன விடுங்க " என்று ராமின் கைகளைப் பிடித்திருந்த கையை எடுத்துவிட முயற்சித்தாள்.

அதற்குள் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த மீரா அங்கே நடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும் பின்பு சுதாரித்து " கிருஷ் " என உரக்கக் கத்தினாள்.

அவளது வருகையால் ராமை விடுவித்தவன் " வா மீரா.. இன்னைக்கு பர்ஸ்டே நியூ ஆபிஷ் போரல.. அதான் விஷ் பண்லாம்னு வந்தேன் " என்றான்.

அதற்கு அவள் பதில் சொல்லாமல் " ஹலோ யார் நீங்க.. திங்ஸ எதுக்கு டச் பண்றீங்க.. வெளிய போங்க " எனக் கத்தவும் " கத்தாத ராட்சசி.. நான் தான் வரச் சொன்னேன்.. " என்று கிருஷ் கூற,

" என்னை சாகடிச்சது பத்தாதுனு இன்னும் என்னை நடு்த்தெருவுல நிறுத்தனும்னு இதெலாம் பண்றியா.. நான் இப்போ தான்டா வாழக்கைல முன்னேறனும்னு நினைச்சேன்.அதுகூட உனக்கு பொறுக்கலியா " என்று வாரத்தைகளால் அவனைக் காயப்படுத்த முயல,

அதை அனுமதிக்காதவன், " நான் ஒன்னும் உன்ன தெருவுல நிறுத்தல, இன்னும் இந்த வீட்ல நீயிருந்தீனா அடிக்கற மழைல உன் வீடே தெருவுல நிக்கற மாதிரி தான் இருக்கும்.. உன் தம்பி தங்கச்சி மேல உனக்கு பாசமிருக்கா இல்லையா.. அவங்கள இந்தமாறி பாழடைஞ்ச வீட்ல தான் தங்க வைப்பியா.. அதுவும் நான் இங்க வந்து உன்னை தொல்லை பண்றப்போ இந்த ஏரியால இருக்குற ஒருத்தர் கூட உனக்கு ஹெல்ப் பண்ண வரல.. அதுலிருந்தே தெரிஞ்சுக்கோ இந்த ஏரியா ஷேப் கிடையாதுனு.. ஒரு வயசுப்பொண்ண வீட்ல வெச்சிட்டு உன்னால நிம்மதியா வெளிய போயிட்டு வர முடியுமா.. அதும் இந்த அரை டிக்கெட்ட நம்பி " என்று ராமைப் பார்த்து கைநீட்ட,

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora