ஒருபுறம் மீரா கதவினைத் தாழிட்டுக் கொண்டு அழுது கொண்டிருக்க, மறுபுறம் நிலா அந்த பூட்டிய கதவின் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்..
ராமிற்கே அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.. அவள் அருகில் சென்றவன் " நிலா போதும்.. ஓவரா அழுகாத.. அப்ரோ மொகமெல்லாம் வீங்கிப் போய் கேவலமாகிடுவ.. " என்று கூறிவிட்டு அவளை இழுத்து நாற்காலியில் அமரவைத்தான்.." ராம் உனக்குத் தெரியுமா.. நேத்து மீரா எப்படி அழுதானு... பயமா இருந்துச்சுடா.. அதான் என்ன ரீசனு கேட்டேன்.. நான் வேற எதுக்காகவும் அந்த அங்கிளுக்கு சப்போர்ட் பண்ணல.. சாரிடா மீராவ கதவைத் திறக்க சொல்லுடா.. நீ சொன்னா கண்டிப்பா கேப்பா.. ப்ளீஸ்டா " என்று தேம்பிக் கொண்டே கூறியவளை, தலையில் கொட்டியவன் " எருமை. நீ எந்தத் தப்பும் பண்ணல.. அழுவறத நிறுத்து.. அக்கா இன்னும் கொஞ்ச நேரம் மனசுவிட்டு அழட்டும்.. அப்பதான் நார்மலாவா.. இனி அவளே வாயத் தொறந்து சொல்ற வரைக்கும் எதுவும் கேட்காத புரியுதா "என்றவன்,
அருகிலிருந்த புத்தகத்தை எடுத்துக் கொடுத்து " நான் சமைச்சிட்டு வரக்குள்ள ரெண்டு லெசன் கம்பீளீட் பண்ற.. இல்லைனு வெச்சுக்கோ உன்னை மேக்ஸ் சார்கிட்ட ஹோம் வொர்க் எப்பவும் காப்பி தான் அடிக்கறனு போட்டுக் கொடுத்திடுவேன் " என்று மிரட்டி விட்டுச் சென்றான்.." ச்சே உன்னையெல்லாம் திருத்தவே முடியாது துரோகி " என்று கத்தியவள் கண்களைத் துடைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்..
நிலாவை சமாதானப் படுத்திய ராம் தன்னை சமாதானம் செய்ய வழி தெரியாமல் தவித்தான்.. அவனுக்கு கிருஷைக் கண்டதிலிருந்தே ஏனோப் பிடிக்கவில்லை..தங்களால்தான் மீரா இவ்வளவு சிரமப் படுகிறாள்.. அவளை எப்படியாவது மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டுமென்று முடிவெடுத்தான்..
அழுதழுது கழைத்துப் போன மீரா இப்போது மனது லேசானதாக இருப்பதைப் போல உணர்ந்தாள்.. இனிக் கோழை மீராவினால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து
மனதைத் தைரியப் படுத்திக் கொண்டு பழைய மீராவாக மாற முடிவு செய்தாள்..
YOU ARE READING
முள்ளும் மலரும் (முடிவுற்றது)
RomanceHighest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும்...