கிருஷின் சந்தோசத்திற்கு அளவேயில்லை... ஒருபுறம் அவனது குடும்பத்தார் அனைவரும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தனது காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டனர். மறுபுறம் தனது காதலியோ தனக்கே தெரியாமல் அவனது வீட்டிற்கு தனது காதலைப் பற்றிக் கூறிவிட்டாள். போதாததற்கு மீராவுடனான இந்தப் பயணம்.. வாய் விட்டு கத்த வேண்டும் போல இருந்தது கிருஷின் நிலைமை..
மீராவைப் பார்த்தவன் அவள் அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வர, " ஏன் மீரா இப்படி பண்ண, எங்க வீட்ல என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க.. எங்க என்னோட அப்பா என்னை அடிச்சிருவாருனு சொல்லித் தான் நான் உடனே வெளிய போயிட்டேன். இப்போ வீட்டுக்குப் போனாத் தான் தெரியும் அடியா உதையானு " என்று பாவமாக கூறவும் அவளுக்கும் தான் அவசரப் பட்டுவிட்டோமோ என்று தோன்றியது..
கிருஷைப் பற்றித் தெரிந்து கொண்டதில் அவனுக்கு எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லை..பெண்கள் விசயத்தில் கூட மிகவும் நல்லவன் தான்.. என்ன தன்னிடம் மட்டும்தான் அவ்வாறு நடந்து கொண்டான்.. அதுவும் ஒரு வரைமுறையோடு என்பதை தெரிந்து கொண்டாள்.
இருப்பினும் மேகாவின் பேச்சு அவளுக்கு உறுத்தலாய் இருக்க,
" ஏன் கிருஷ் என்னை உனக்குப் பிடிச்சுது " என்று கேள்வியாய் கேட்டாள்.ஒரு நொடி அவளைப் பார்த்தவன்,
"எனக்கு உன்னை பார்த்தவுடனே பிடிச்சிருந்தது.. உங்கோட வாழனும்னு ஆசைப் படறேன் அவ்ளோ தான் " என்றான் சாதாரணமாக,இந்த திரைப்பட வசனத்தை நிறைய பேர் தனது தோழிகளிடம் கூறுவதைக் கேட்டிருக்கிறாள். அப்போதெலாம் ' அதென்னமோ அழகான பொண்ணு.. இல்ல பணக்காரப் பொண்ண பார்த்தாதான் உங்களுக்குத் தோனுமா.. " என்று அவர்களிடமே கூறியிருக்கிறாள்.. ஆனால் இன்று கிருஷ் கூறியபோது அவ்வாறு கூறவும் முடியாது என்றும் அதேபோல் அவன் கூறுவது பொய்யில்லை என்றும் அவனது நேர்மையான குரலே எடுத்துக் கூறியது..
YOU ARE READING
முள்ளும் மலரும் (முடிவுற்றது)
RomanceHighest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும்...