10 💕

3.5K 161 41
                                    

❤ Flashback ❤

முதல் நாள் கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் சாதனா.

"சாதனா.. இட்லி ரெடி.. உனக்கு பிடிச்ச தக்காளி சட்னி வச்சிட்டேன்.. மதியத்துக்கு நீ கேட்ட லெமன் சாதம் ரெடி.. டிபன் பாக்ஸ்ல வச்சிட்டேன்.. நீ கிளம்பிட்டீயா.."என்றபடி சாதனாவின் அறைக்கு வந்தார் சங்கரன்.

"அப்பா கொஞ்சம் பொறுமையா இருங்க.. இன்னும் நான் கிளம்புறதுக்கு நிறைய நேரம் இருக்கு.."என்றாள் சாதனா.

"அப்பா ஆசைப்பட்ட மாதிரி கணக்கு டீச்சர் ஆகலாம் ல.."என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார் சங்கரன்.

சாதனா பதில் எதுவும் சொல்லாமல்.. அவரை முறைத்துவிட்டு.. தன் பேக்கில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

சங்கரன்.. "சரி.. உன் விருப்பம் போல கம்ப்யூட்டர் சயின்ஸ் படி.. ஒரு வருஷம் வேலை பாரு.. ஆனா அப்பா கேட்டதும் பண்ணுவனு சொல்லிருக்க.. நியாபகம் வச்சுக்கோ.."என்றார் சங்கரன் குழந்தை போல.

அவரை பார்த்து சிரித்த சாதனா.. ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள். அதைப் பார்த்த சங்கரன் உற்சாகமாக.. "நிஜமாவா டா.. கரஸ்ல மேத்ஸ் படிக்க போறீயா.."என்றார்.

"ம்.."என்றாள் சாதனா சிரிப்புடன்.

"ரெகுலர்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க போற.. கரஸ்ல மேத்ஸ் படிக்க போற.. கஷ்டமா இருக்காதா டா.. அப்பா உன்னை கஷ்டப்படுத்துறேனா.."என்றார் சங்கரன் சற்று வருத்தமான குரலில்.

"எதுவுமே கஷ்டம் இல்ல.. because.. iam a big girl now.."என்றாள் சாதனா.

சங்கரனும் சிரிப்புடன்.. "சரிடா.. வா நானே உன்னை காலேஜ்ல விட்டுறேன்.."என்றார்.

தன் பைக்கில் சாதனாவை கல்லூரி வாயிலில் இறக்கி விட்ட சங்கரன்.. "சாதனா.. ragging லாம் பண்ணுவாங்களா டா.. அப்பா வேணா கூட வரட்டா.."என்றார்.

அவரை முறைத்த சாதனா.. "அப்பா.."என தொடங்க.. "ம்.. சரி.. சரி.. நீ இப்ப பெரிய பொண்ணு.. independentஆ இருக்கணும்.. எல்லாத்தையும் நீயே சமாளிச்சுப்ப.. அவ்ளோதான.. நான் கிளம்புறேன்.."என சங்கரன் அங்கிருந்து கிளம்பினார்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now