சாதனாவிடம் கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிய மித்ரன்.. தன் நண்பன் அரவிந்த் பெங்களூரில் தங்கியிருந்த அறைக்கு சென்றான்.
"டேய்.. என்ன ஒரு போன் கூட பண்ணலை.. இப்டி திடீர்னு வந்து நிக்கிற.."என கேட்டான் அரவிந்த்.
"நான் இங்க தான் இருக்கப் போறேன்.."என்ற மித்ரன் வேறு எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டான்.
சரி அசதியா இருக்கான் போல.. என நினைத்த அரவிந்த் வேறு எதுவும் கேட்கவில்லை.
ஆனால் சில தினங்கள் கடந்திருந்த போதும்.. எதுவும் பேசாமல் எங்கும் செல்லாமல் மித்ரன் இயல்புக்கு மாறாக நடந்து கொண்டதை கவனித்த அரவிந்த்.. "டேய்.. என்னாச்சு உனக்கு.."என கேட்டான்.
"என்னென்னமோ ஆகிடுச்சு.."என சிரித்தான் மித்ரன்.
புரியாமல் அரவிந்த் விழிக்க.. "லவ் வந்துட்டாலே இப்டித்தான் மச்சி.. சம்மந்தம் இல்லாம பேச தோணுது.."என்றான் மித்ரன்.
"என்னது லவ்வா.. இது எப்ப இருந்து.."என கேட்டான் அரவிந்த்.
"இங்க வந்ததுல இருந்து.."என்றான் மித்ரன்.
"வந்ததுல இருந்தா.. யாருடா அந்தப் பொண்ணு.."என கேட்டான் அரவிந்த்.
"அன்னைக்கு நீ கூட பார்த்தீயே.."என்ற மித்ரன்.. சாதனாவை பார்த்தது முதல் தங்களுக்குள் நடந்த சண்டை வரை எல்லாத்தையும் சொன்னான்.
அதையெல்லாம் கேட்ட அரவிந்த்.. "என்னடா இப்டி பேசிட்டு வந்திருக்க.. சிஸ்டர் தான் கோபத்தில ஏதோ பேசிருக்காங்க.. அதுக்குனு மூஞ்சிலே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்திருக்க..
உன் மேல தான்டா தப்பு.. உன்னை யார் கிஸ் பண்ண சொன்னது.. அதான் சிஸ்டர் கோபப்பட்டிருக்காங்க.."என பேசிக் கொண்டிருக்க.. மித்ரன் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
"சொன்னா அப்டித்தான் செய்யணும்னு எதுவும் கட்டாயம் இல்லையே.."என்றான் மித்ரன்.
அரவிந்த்.. "என்னடா சொல்ற.."என கேட்டான்.
"கோபத்தில மூஞ்சிலே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.. அப்புறம் மனசு கேட்காம மேடமை போய் பார்த்தேன்.. அவ என்னை எவ்ளோ லவ் பண்றானு தெரிஞ்சிட்டு வந்துட்டேன்.."என உற்சாகமாக சொன்னான் மித்ரன்.
YOU ARE READING
வல்லமை தாராயோ..
General Fictionகடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..