மித்ரனின் அறைக்குள் நுழைந்தாள் சாதனா. மித்ரனின் வாசம் அந்த அறையை நிறைத்திருப்பதாக தோன்றியது சாதனாவுக்கு..
மித்ரனிடம் தான் நடந்து கொண்டது.. தவறு என்பது புரிந்தாலும் தனக்கு வேறு வழியில்லை என்பதை நினைக்க நினைக்க கண்ணீர் வழிந்தது சாதனாவின் கண்களில்.
அந்த நேரம் அந்தப் பக்கமாக வந்த பவித்ரா.. சாதனா அழுவதை பார்த்ததும் பதறிப்போய்.. "சாதனா என்னாச்சு.."என்றாள்..
"பவி.. பவி.."என அவளை அணைத்து அழுதாள் சாதனா.
"என்னாச்சு டா.. எதுக்கு இப்ப அழுற.. அழாத டா.."என சமாதானம் செய்தாள் பவித்ரா.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட சாதனா.. "நீ போ.. பவி.. அத்தை ரூமை க்ளீன் பண்ண சொன்னாங்க.."என்றாள்.
"நான் பண்றேன்.. நீ போ.."என பவித்ரா சொல்ல மறுத்த சாதனா.. அவளை போகச் சொல்லிவிட்டு.. மித்ரனின் அறையை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
மித்ரனின் சட்டை ஒன்றை அந்த அறையிலிருந்து யாரும் அறியாமல் எடுத்து வந்தாள் சாதனா.
அன்று இரவு..
"ஆதி.."என்றாள் பவித்ரா..
"என்ன பவி.."என கேட்டான் ஆதவன்.
"இன்னைக்கு மித்ரன் ரூமை சாதனாவை க்ளீன் பண்ணச் சொல்லி அத்தை சொல்லிருப்பாங்க போல.. ஆனா அவ அங்க நின்னு அழுதுட்டு இருந்தா.. ஒருவேளை அவங்களுக்குள்ள எதுவும் ப்ராப்ளமா இருக்குமோ.."என்றாள் பவித்ரா.
அவளுக்கு பதில் சொல்லாமல்.. அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான் ஆதவன்.
"என்ன யோசிக்கிறீங்க.."என கேட்டாள் பவித்ரா.
"சாதனாவுக்கும் மித்ரனை பிடிச்சிருக்கு.. ஆனா நடந்ததை நினைச்சு பயப்படுறா போல.."என்றான் ஆதவன்.
"நாமளே அத்தை மாமா கிட்ட பேசி மித்ரனுக்கும் சாதனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமா.. மித்ரனுக்கு எதுவும் தெரிய வேண்டாம்.."என்றாள் பவித்ரா.
"சாதனா அதுக்கு ஒத்துக்க மாட்டா பவி.. மித்ரன் தான் இதில முடிவெடுக்கணும்.. சாதனா பத்தி எல்லாம் தெரிஞ்ச பிறகு அவன் ஏத்துக்கிட்டா தான் சாதனாவும் சம்மதிப்பா.."என்றான் ஆதவன்.
CZYTASZ
வல்லமை தாராயோ..
General Fictionகடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..