18 💕

3.2K 150 45
                                    

அப்போது ஒருநாள்..

அஞ்சலி.. மித்ரன் அரவிந்திடம்.. தன் வேலையை ரிசைன் செய்யப்போவதை கூறினாள்.

ஏன்.. என மித்ரன் காரணம் கேட்டான்..

முதலில் சொல்ல மறுத்த அஞ்சலி.. மித்ரன் கட்டாயப்படுத்த.. காரணத்தை சொன்னாள்.

தினேஷ்.. தான் காரணம் என்று அஞ்சலி சொன்னாள். அவன் தவறான நோக்கத்தோடு தன்னிடம் நெருங்க முயற்சிப்பதை சொன்னாள் அஞ்சலி.

அதற்கு மித்ரன்.. "ஓ.. அவனுக்கு பயந்துட்டு.. வேலையை ரிசைன் பண்ற.. வேறொரு வேலைக்கு போ.. அங்கையும் அப்டி ஒருத்தன் இருப்பான்.. அவனுக்கும் பயந்துட்டு ஓடிட்டே இரு.."என்றான்.

அஞ்சலி அவனிடம்.. "புரிஞ்சுக்கோ மித்ரன்.. இங்க யார்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணாலும் அவன் மேல எந்த நடவடிக்கையும் இருக்காது.. எத்தனை நாள் இப்டியே போராடுறது.."என்றாள்.

"சரி.. நீ ரிசைன் பண்ணு.. ஆனா நான் அவனை சும்மா விடமாட்டேன்.."என்றான் மித்ரன்.

"மித்ரன் என்ன பண்ணப்போற.."என அரவிந்தும் அஞ்சலியும் கேட்டுக் கொண்டிருக்க.. அதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து நகர்ந்தான் மித்ரன்.

தினேஷை தேடிச் சென்றான் மித்ரன்.. அவன் யாரிடமோ போனில் பேசி சிரித்துக் கொண்டிருந்தான்..

அவன் சட்டையை பிடித்து.. அவனை அடிக்கத் தொடங்கினான் மித்ரன்.

"ஏய்.. யாரு.. நீ.."என தினேஷ் கேட்க.. அடுத்து அவன் பேச முடியாத அளவிற்கு அவனை நிறுத்தாமல் அடித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

தன் கோபம் தீரவில்லை.. இருந்தும் அவனை அடிப்பதை நிறுத்தி விட்டு.. தன் கையை உதறினான் மித்ரன்..

தினேஷ் "உன்னை என்ன பண்றேன் பாரு.."என சொல்லிக் கொண்டே மித்ரனின் கழுத்தில் இருந்த ஐடி கார்டை பார்த்தான்.

அவன் பார்வையை கவனித்த மித்ரன்.. "நீ என்ன வேணா பண்ணிக்கோ.."என்றவாறு தன் கழுத்தில் இருந்த ஐடி கார்டை கழட்டி அவன் முகத்திலே எறிந்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

வல்லமை தாராயோ..Tempat cerita menjadi hidup. Temukan sekarang