20 😘

3.3K 155 35
                                    

சாதனா கண்கள் கலங்க.. "அனு என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுறீயா.."என கேட்க.. திகைத்துப் போனாள் அனு.

"சரி.. போலாம்.. இங்க இருக்க ஏன் பிடிக்கலை.."என நிதானமாக கேட்டாள் அனு.

சாதனா அனுவின் மடியில் படுத்தபடி.. மித்ரனை பார்த்தது முதல் நடந்ததை சொன்னாள்.

அதையெல்லாம் கேட்ட அனு.. "நீ ஏன்டா அவசரப்பட்டு அப்டி பேசின.. நாம மித்ரன் கிட்ட பொறுமையா எல்லாத்தையும் சொல்லலாம்.. அவருக்கும் உன்னை பிடிச்சிருக்கு ல்ல.. அவர் உன்னை புரிஞ்சுப்பாரு.."என சொன்னாள் அனு.

"வேண்டாம் அனு.."என்றாள் சாதனா.

"ஏன் டா.. நாம வேணா ஆதி கிட்டயும் பவி கிட்டயும் பேசுவோமா.."என கேட்டாள் அனு.

"வேண்டாம்.. அனு.. நீ எதாவது சொல்லி என்னை இங்கிருந்து என்னை கூட்டிட்டு போயிடு.. அது போதும்.."என சொன்ன சாதனா அனுவின் மடியிலிருந்து எழுந்தாள்.

"மனசில இவ்ளோ ஆசை வச்சிட்டு.. நீ எங்க போனாலும் மித்ரனை தானடா நினைச்சிட்டு இருப்ப.."என கேட்டாள் அனு.

"ஆனா பக்கத்திலே இருந்து மித்து என்கிட்ட இருந்து விலகிப் போறது.. கஷ்டமா இருக்கு.. அதுவும் என்னால தான.. அதை என்னால தாங்கிக்க முடியலை.."என்றாள் சாதனா.

அவளுக்கு எப்படி புரியவைப்பது என அனுவுக்கு புரியவில்லை. அவளுக்கு தெரியாம மித்ரன் கிட்ட பேசலாமா.. என யோசித்தாள் அனு.

"இங்க நாளைக்கு கோவில் திருவிழா.. அது முடிஞ்சதும் நாம கிளம்பலாம்.. நீ மாமு கிட்டயும் பவி கிட்டயும் பேசு.."என்றாள் சாதனா.

மனதில் வேறு எதையோ யோசித்தபடி.. தலையசைத்தாள் அனு.

"பாப்பாவ எங்க.."என கேட்டாள் சாதனா.

"தூங்கிட்டு இருந்தா.. பவி கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன்.."என்றாள் அனு.

"சரி நான் போய் பாப்பாவ பாத்துட்டு வர்றேன்.."என்ற சாதனா அங்கிருந்து சென்றாள்.

அவளுக்கு தெரிந்தால் மித்ரனிடம் பேச விட மாட்டாள்.. அவளுக்கு தெரியாமல் தான் பேச வேண்டும்.. என அனு மனதில் நினைத்துக் கொண்டிருக்க.. மித்ரனே அங்கு வந்தான்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now