பறவைகள் கூச்சலிட கடல் அலைகள் ஆர்ப்பரிக்க பூக்கள் மிளிர்த்திட மிகவும் அழகாகவே விடிந்தது அந்த காலை. அந்த கடலோர சாலையில் காற்றை கிழிக்கும் வேகத்தில் போய் கொண்டிருந்தது அந்த கார். அதனுள் இருந்த இருந்த பவானி வழக்கம் போல புலம்பி கொண்டிருக்க அதனை கேட்டும் கேக்காமலும் வண்டியை செலுத்தி கொண்டிருதார் வாசுதேவன்.
"என்னங்க உங்களுக்கு நான் பேசுறது கேக்குதா இல்லையா? பாருங்க இப்போ பூஜைக்கு லேட்டா ஆகிடுச்சு இதுக்கு தான் சீக்கிரமா வாக்கிங் போயிடு வாங்கனு சொனேன். நான் சொல்றத எப்போவாச்சு கேட்டுஇருந்த தான. இது நம்ம பையன் விஷயம்னு தெரிஞ்சும் பொறுப்பில்லாம இருந்த எப்படி? உங்கள தான் கேட்டுட்டு"... என்று சொல்லி முடிப்பதற்குள் வாசுதேவன் "இப்போ என்ன ஆச்சி... இன்னும் 5 மினிட்ஸ் ல போய்டலாம்... நீ தேவை இல்லாம டென்ஷன் ஆக்ர".. பவானி இதற்கு மேல் பேசுவது வீண் என்று முகத்தை திருப்பி கொண்டார்.
சொன்னபடியே கோவிலும் வந்து சேர்ந்தது. அது ஒரு முருகர் கோவில். மிகவும் அழகாக இருந்த அந்த கோவிலின் சிலை சிற்பங்களை பார்த்தவாறு பவானி வாசு ஜோடி நடந்து வந்தனர். அங்கு திடீரெண்டு ஒரு பாடல் அவர்களை ஈர்த்தது.
இருவரும் அங்கு சென்று பார்த்த போது அங்கு தாவணி கட்டி கொண்டு ஒரு பெண் "சஷ்டியை நோக்க சரவணா பவன" என்று முருகர் பாடலை அந்த பெண் அழகான குரலில் பாடி கொண்டிருந்தாள்.அதை அந்த பூசாரி கூட பூஜை செய்வதை மாறாது கேட்டு கொண்டிருந்தார்.அவள் பாடி முடித்த பிறகு அவர்கள் இருவரும் அந்த பெண்ணை நெருங்கினர்.
"ரொம்ப நல்ல பாடின மா..சாமி கும்பரத்துக்கு முன்னாடியே சாமிய தரிசிச்ச மாதிரி இருந்துச்சு..எங்க மா பாட்டு கத்துகிட்ட.." அதுக்கு அவள் "ரொம்ப நன்றி மா..நான் முறையா பாட்டு கத்துக்களை மா..ஏதோ தெரிஞ்ச பாட்டை பாடுவேன் அவ்ளோதான் மா "
"சரிடா உன் பேர் என்ன?? எங்க இருந்து வர?? உன் அம்மா அப்பா ல எங்க இருகாங்க ??? " என்று அடிக்கிற கொண்டே போனார் பவானி.
YOU ARE READING
இனி எல்லாம் வசந்தமே
Romanceகாதல் பார்த்த உடனே வரலாம் இல்லை பேசி பழகி வரலாம் இல்லை பார்க்காமல் கூட வரலாம். காதல் சுகமான சந்தோஷமாக இருக்கலாம். இல்லை நரக வழியாக கூட இருக்கலாம். சிலருக்கு தோல்வியிலும் சிலருக்கு வெற்றியிலும் முடியலாம். ஆனால் காதல் நிச்சயம் ஒருவரின் வசந்த காலமாக த...