வசந்தம் 3

180 12 1
                                    

வாசுதேவன் தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பெரிய கோடிஸ்வரர்களில் ஒருவர்.தன் தாத்தா மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் அவரிடம் இருந்து எந்த உதவியும் வாங்காமல் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர்.அவர் பவானியை மணம் முடித்த பிறகு பவானி குரூப் ஆஃ கம்பனிஸ் ஆரமித்து அதை பெரிய அளவில் வளர செய்தார்.

அவருடைய அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு கார்த்திகேயன்.கார்த்தி அவர்களின் செல்ல பிள்ளை.தாய் தந்தை சொல்லை தட்டாதவன்.ஆறு அடி உயரம்,எலுமிச்சை நிறம், தூரத்தில் இருந்து பாத்தாலே பெண்களை ஈர்க்கும் வசீகர உடலமைப்பு ,மொத்தமாக சொல்ல போனால் அந்த முருகருடைய அம்சத்தில் பிறந்தவன்.ஆனால் அவனிடம் இருக்கும் ஒரே கெட்ட குணம் அவனுடைய கோவம்.அவனுக்கு கோவம் வந்தால் வீடே ரெண்டாகி விடும்.

அவனுடைய நெருங்கிய நண்பன் கிருஷ்ணன்.அவனுடைய தந்தையும் மிக பெரிய பணக்காரர்தான்.அவன் தன் சிறிய வயதினிலே தன் தாய் தந்தையை இழந்தவன்.அவருடைய அணைத்து சொத்தும் கிருஷ்ணன் பேரில் தன் இருந்தது.வாசுதேவனும் கிருஷ்ணா உடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.அதனால் அவர்கள் இறந்த பிறகு அவனையும் அவர்களே தன் பிள்ளை போல வளர்த்தனர்.இன்னும் சொல்ல போனால் தன் பிள்ளையை விடவே அதிகமான பாசம் அவன்மேல் இருந்தது.அவனும் அவர்களை சொந்த தாய் தந்தையாகவே பார்த்தான்.சொந்தமாக மாளிகை போல் வீடு இருந்தாலும் கார்த்தி வீட்டிலே அதிகமாக தங்குவான்.

கிருஷ்ணனும் சும்மா இல்லை  5 1/2 அடி உயரத்தில், மாநிறத்தில்,ஆண்மகனுக்கு உண்டான தேஜஸுடன் மிடுக்காகவே இருப்பான்.அந்த மாயக்கண்ணன் போலவே இவன் சிரிப்புக்கும்  மயங்காதவர் எவரும் இல்லை.ஆனால் இவன் மொத்தமாக அந்த கிருஷ்ணரை போல இல்லை.ஏனென்றால் பெண்கள் என்றாள் இவனுக்கு சுத்தமாக ஆகாது.மறந்தும் கூட அவர்களிடம் அவ்வளவாக பேசமாட்டான்.முக்கியமாக காதல் மேல் துளியும் நம்பிக்கை இல்லாதவன்.

கார்த்தியும் கிருஷ்ணாவும் சிறு வயதிருதே ஒன்றாக படித்து விளையாடி வளந்தவர்கள்.இவர்களின் நட்பு துரியோதனன் கர்ணனை போல் என்றே சொல்லலாம். ஒருவருக்காக ஒருவர் பார்த்து பார்த்து செய்து கொள்வர்.இவர்கள் இருவரும் வேறு  யாரையும் அவர்கள் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் பள்ளியில் வந்தவுடன் ஜெய் மற்றும் வெற்றியை மிகவும் பிடித்து விட  அவர்களையும் அவர்கள் கூட்டணியில் சேர்த்து கொண்டு ஒரே கல்லூரியிலும் படித்தனர்.ஜெய்,வெற்றியும் நல்ல வசதி வாய்ப்பு உடையவர்கள் தான்.இவர்களும் கார்த்தியின் பெற்றோருக்கு செல்ல பிள்ளை ஆகி இருந்தனர்.

இனி எல்லாம் வசந்தமே Donde viven las historias. Descúbrelo ahora