மித்ரஹாசினி நண்பர்களால் மித்ரா என்று அழைக்கப்படுபவர் பெயருக்கேத்த அழகும் அறிவும் உடையவள். 5 அடி உயரம், சிவப்பு நிறம், கண்ணிமைக்காமல் பார்க்க தூண்டும் அழகு,ஆடவர்களை கட்டி இழுக்கும் பெண்ணுக்குரிய அனைத்து அம்சங்களும் நிரம்ப தேவதையாகவே மண்ணுலகில் பிறந்தவள். அவள் சிரிப்பிற்கு மயங்காதவர்கள் கிடையாது.அழகு இருக்கும் பெண்களுக்கு திமிரு அதிகமாவே இருக்கும். அது அவர்களின் இயல்பு. ஆனால் அது இவளை பொறுத்த வரை துளியும் கிடையாது.
சாந்தமான முகம், எதையோ எப்போதும் தேடும் துடிப்பான கண்கள், தேன் சொட்டும் அளவுக்கு இனிப்பான குரல் என்று பூமியில் உள்ள அனைவரையும் ஈர்க்கும் அளவுக்கு அவளுடைய குணம் இருக்கும். எல்லாருக்குமே அவளை பிடிக்க பிரச்சனைக்கும் அவளை பிடித்து தான் போனது. தன் சிறு வயதிலே தன் தாயை இழந்தாள். பிறகு தன் தாய் போன துக்கத்தில் தந்தையும் இறைவனடி சேர அவள் தன் சித்தியின் பொறுப்புக்கு வந்தாள்.
அவள் சித்தியும் சித்தப்பாவும் அவளை ஒரு வேலைக்காரியாகவே பார்த்தனர். தன் அக்காவின் குழந்தை என்று கூட பாராமல் அவளை கொடுமை பண்ணி அடித்து கடமைக்கு அவளை வளர்த்து வந்தனர்.அவளுக்கு வாழ்க்கையே வெறுத்து போன நேரத்தில் அவளை காப்பாற்ற வந்த தேவதையாக இல்லை இல்லை ஒரு தாயாக வந்தவள் தான் மது என்னும் மதுவர்ஷினி.
மதுவர்ஷினி 5 1/4 அடி உயரம், அளவான கூந்தல், எலுமிச்சை நிறம், நிமிர்ந்த நடை, கூர்மையான கண்கள்,பெண்ணுக்கு உரிய கர்வமும் திமிரும் எப்போதும் அவளிடத்தில் மிளிரும்.பாசம் காட்ட வேண்டிய இடத்தில் சீதையாகவும் ,சீறி பாய வேண்டிய இடத்தில் அந்த கண்ணகி,திரௌபதியாகவும் மொத்தமாக சொல்ல போனால் அந்த பாரதி கண்ட புரட்சி பெண்ணாகவே இருப்பாள்.ஆண்களிடம் சராசரியாக எல்லா பெண்களுக்கும் உள்ள பயம் இவளுக்கு துளியும் இல்லை.
தாய் தந்தை யாரென்று தெரியாமல் அனாதை ஆசிரமத்தில் சிறு வயதில் இருந்து வளர்ந்து வந்தாலும் நாம் யாராக ஆக வேண்டும் என்பது பிறப்பினில் இல்லை நம் வாழ்க்கையை நாம் தான் வடிவமைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நன்றாக படித்து, படிப்பு மட்டும் இல்லாமல் கிடைக்கிற வேலையை செய்து அங்கு தன் போன்ற குழந்தைக்கு உதவி செய்து வந்தாள்.அது மட்டும் அல்ல அவள் காதல் மன்னன் அஜித்தை போல் நண்பர்களிடம் பெட் கட்டி அதில் ஜெயித்து அதில் வரும் பணத்தை வைத்து அந்த ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்வாள்.
DU LIEST GERADE
இனி எல்லாம் வசந்தமே
Romantikகாதல் பார்த்த உடனே வரலாம் இல்லை பேசி பழகி வரலாம் இல்லை பார்க்காமல் கூட வரலாம். காதல் சுகமான சந்தோஷமாக இருக்கலாம். இல்லை நரக வழியாக கூட இருக்கலாம். சிலருக்கு தோல்வியிலும் சிலருக்கு வெற்றியிலும் முடியலாம். ஆனால் காதல் நிச்சயம் ஒருவரின் வசந்த காலமாக த...