அந்த விடியற்காலை பொழுதில் அவள் மட்டுமே அந்த கடற்கரை ஓரம் இருந்தாள்.ஆள் அரவம் இல்லாத அந்த கரை அவளை வெகுவாக கவர்ந்தது.அவள் கால் மண்ணில் புதைந்திட அவள் கண்ணை மூடி கடல் அலைகளின் ஓசையை ரசித்து கொண்டிருந்தாள்.மெதுவாக மேகம் சூழ அவள் மீது மழைத்துளி விழுந்தது.அவள் நிமிர்ந்து பார்க்க வானம் அவளை கொஞ்சும் வண்ணம் அவளை அணைக்க மழையை தூது விட்ருந்தது.மழையின் வீரியம் அதிகரிக்க அவள் மேனியை வெகுவாக மழைத்துளி தீண்டி கொண்டிருந்தது.மழையில் வீரியத்தால் கடல் கூட அவள் கண்ணுக்கு தெரியவில்லை.
அவள் மழையின் அழகில் கரைந்துகொண்டிருக்கும் போது அனு என்ற ஒரு உச்சரிப்பு கேட்டது.அவள் திரும்பி பார்க்க அவனின் உருவம் அவளை நெருங்கி வந்தது. அவனின் கண்கள் அவளுள் எதையோ தேட அவள் அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.பின் சுதாரித்து " நீங்க எப்படி இங்க?? " அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளை நெருங்கினான்.அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி அனு என்று கூப்பிட அவள் வெற்றி என்று முணுமுணுத்தாள்.பின் அவன் சிறிதும் தாமதிக்காமல் அவள் இதழை தன் இதழால் சிறை செய்தான்.
அனு பதறி அடித்துக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தாள்.அவளின் இதயம் இன்னும் படபடவென அடித்துக்கொண்டுதான் இருந்தது.அவள் அவள் நிலையை உணரவே சிறிது நேரம் பிடித்தது.அவள் கடிகாரம் நேரம் காலை 6 மணியை காட்டியது. "ஐயோ!!! கனவா..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். " கடவுளே...இது என்ன இப்டி ஒரு கனவு...ஓவர் ஆஹ் சைட் அடிக்காதனா கேக்கிறியா அனு...இப்ப பாரு இப்டி கண்ட கண்ட கனவுலா வருது...நல்ல வேளை யாரும் பாக்கல..." என்று தன்னை தானே நொந்துகொண்டு கட்டிலை விட்டு கிளம்பி சென்றாள்.
நேற்றுயிருந்த வேலை மிகுதியால் அலைச்சலால் கிருஷ்ணா மணி 6 ஆகியும் எழாமல் படுத்தியிருந்தான்.பின்பு கதவு தட்டப்படும் ஓசை கேட்டு பதறி எழுந்து வரேன் என்று கத்தினான்.உடைகளை சரிசெய்து கொண்டிருக்கும் போது தொடர்ந்து கதவு தட்டபட்டு கொண்டேயிருந்தது.கிருஷ்ணா எரிச்சல் ஆகி கதவை திறந்தான்.அங்கு மது ஏதும் தெரியாதது போல் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.
ŞİMDİ OKUDUĞUN
இனி எல்லாம் வசந்தமே
Romantizmகாதல் பார்த்த உடனே வரலாம் இல்லை பேசி பழகி வரலாம் இல்லை பார்க்காமல் கூட வரலாம். காதல் சுகமான சந்தோஷமாக இருக்கலாம். இல்லை நரக வழியாக கூட இருக்கலாம். சிலருக்கு தோல்வியிலும் சிலருக்கு வெற்றியிலும் முடியலாம். ஆனால் காதல் நிச்சயம் ஒருவரின் வசந்த காலமாக த...