வெற்றியும் ஜெய்யும் வாசலில் நுழைய கிருஷ்ணாவும் கார்த்தியும் பெண்களிடம் தங்களை பற்றி விசாரித்து கொண்டிருப்பதை கண்டனர்.இது எதிர்பார்த்தது என்பதால் அவர்கள் எந்த சலனமும் இல்லாமல் டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தனர்.டேய் என்ற சத்தம் கேட்டு அவர்கள் திரும்ப 4 கண்களும் கோவமுடன் பார்ப்பதை சற்று நடுங்கினர்.
"இவனுங்க விடமாட்டாங்க போல டா..." என்று ஜெய் முணுமுணுக்க கார்த்தி அவனை கண்டு " நேத்து எங்கடா போயிருந்திருந்திங்க..." என்று கேட்க வெற்றியோ "அது ஜெய் போன் உடைஞ்சிடுச்சுடா...அதான் வேற போன் வாங்க போனோம்...நைட் லேட் ஆகிடிச்சி அதான் ஜெய் வீட்ல போய் தூங்கிட்டோம்..." என்று ஏற்கனவே தயாராக வைத்திருந்த பதிலை கூறினான்.கார்த்தி சற்று யோசிக்க கிருஷ்ணாவிற்கு இவர்கள் ஏன் அதை நேற்றிரவு கால் செய்து சொல்லவில்லை என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
பவானி அங்கு வந்து உணவு பரிமாற அனைவரும் உண்டனர்.பின் மது பவானியிடம் " அம்மா...எங்களுக்கு கொஞ்சம் ஷாப்பிங் வேளை இருக்குமா....நாங்க போய் வாங்கிட்டு வரோம்..." என்று கூற அவரோ " என்ன வேணுமோ கிருஷ்ணா கிட்ட சொல்லுமா அவன் வாங்கிட்டு வருவான்...இன்னும் 2 நாள் தான் இருக்கு ரிசப்ஷன்க்கு எல்லாரையும் அதுக்குள்ள இன்வைட் பண்ணனும்...அதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணுங்க மா..." என்று கூறினார்..
மதுவோ " இல்ல மா...எங்க ஆசிரமம் போய் பார்வதி அம்மாவ ரிசப்ஷன்க்கு
கூப்பிடனும்...அதான் அப்டியே திங்ஸ் வாங்கலாம் னு பார்த்தேன்..." என்று கூற பவானியோ " அப்போ கிருஷ்ணா கூட போய் இன்விடேஷன் குடுத்துட்டு...அப்டியே திங்ஸ் வாங்கிட்டு வந்துரு..." என்று கூற கிருஷ்ணாக்கும் மதுவுக்குமே ஷாக் ஆனது.பவானி அனு, ப்ரியாவிடம் திரும்பி " நீங்க ஜெய், வெற்றி கூட போய் இந்த லிஸ்ட் ல இருக்கிறவங்களுக்கு இன்விடேஷன் குடுங்க..." என்று நீட்டினார்.வேறு வழியில்லாமல் அனைவரும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிளம்பினர்.
கார்த்தியிடம் வாசுதேவன் " கார்த்தி நம்ப எல்லாம் போய் புடவை, அப்றம் நிச்சிய மோதிரம் இதெல்லாம் வாங்கிட்டு வந்துரலாம் டா..."என்று கூறி நகைக்கடை க்கு கூட்டி சென்றனர்.
YOU ARE READING
இனி எல்லாம் வசந்தமே
Romanceகாதல் பார்த்த உடனே வரலாம் இல்லை பேசி பழகி வரலாம் இல்லை பார்க்காமல் கூட வரலாம். காதல் சுகமான சந்தோஷமாக இருக்கலாம். இல்லை நரக வழியாக கூட இருக்கலாம். சிலருக்கு தோல்வியிலும் சிலருக்கு வெற்றியிலும் முடியலாம். ஆனால் காதல் நிச்சயம் ஒருவரின் வசந்த காலமாக த...