வசந்தம் 10

190 13 3
                                    

சமையல் அறையை பார்க்க சென்ற மது திரும்பி செல்ல எத்தனிக்க அங்கு கிருஷ்ணா கை கட்டி கொண்டு அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்.அவள் அவன் பார்ப்பதை கண்டுகொள்ளாமல் வெளியே செல்ல போக அவன் அவள் முன்னாடி வழிமறித்து நின்றான்.அவள் என்ன என்பது போல் பார்க்க அவன் அடிமேல் அடிவைத்து முன்னேறி வர அவள் அதை சுதாரித்து அவனிடம் " ஹலோ...என்ன வேணும்...எதுக்கு இப்போ வழிவிடாம நிக்கிறிங்க..." என்று கோவமாக கேக்க அவன் எதும் பேசாமல் அவளை முறைதான்.

அதில் இன்னும் கடுப்பேறியவள் " உங்களுக்கு என்ன காது கேக்காத...எதுக்கு இப்போ இப்டி பண்ணிட்டு இருக்கீங்க...எதுக்கு முறைக்கிறீங்க...மிஸ்டர் ஒழுங்கா வழிய விடுங்க..." என்று கத்தினாள்.அவன் மெல்ல அவள் அருகில் வந்து " என்ன டி சொன்ன காது கேக்காத...எவ்ளோ திமிரு டி உனக்கு...ஹே எனக்கு பொண்ணுங்களே பிடிக்காது...அதும் உன்ன மாதிரி திமிரு பிடிச்சவங்கள பாத்தாலே பிடிக்காது..
நானே கார்த்தி மித்ரா கல்யாணத்துக்காக தான் பொறுமையா இருக்கேன்....ஆமா நான் உன்ன என்ன பண்னேன்...நான் யார அடிச்சா உனக்கென டி ...நீ யார் கேக்றதுக்கு...அப்றம் நான் செலக்ட் பண்ண திங்ஸ் ல நீ வேணும்னு ரிஜெக்ட் பண்ணிட்ட...என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல..."என கத்தினான்.

மது முதலில் அவன் பேச்சில் அதிர்ந்தாலும் அவன் பேச பேச அவளுக்கு கோவம் முட்டிக்கொண்டு வந்தது " ஹே யார பாத்து டி போடற...பெரிய இவனா டா நீ...உன்ன பத்தி காலேஜ் ல விசாரிச்சேன்...உன்ன பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க...நீ தான் கார்த்தி அண்ணாவ கெடுக்குற...ஒரு பொண்ணு கிட்ட இப்டி கேவலமா நடத்துகிற...நீ கத்துனா நான் பயந்திருவனா...போடா..." என்று அவனை தாண்டி செல்ல முயல அதற்குள் அவன் அவளை கையை பிடித்து " என்ன சொன்ன போடா வா... " என்று கையை இருக்க அவள் அவனிடம் இருந்து விடுபட முயற்சித்தாள்.அப்போது பவானி மதுவை அழைக்க கிருஷ்ணா அவள் கையை விடுவித்து " உன்ன அப்றம் பாத்துக்கிறேன்..." என்று கோவமாக அவளை விட்டு சென்றான்.

கார்த்தியும் மித்ராவும் கோவிலை அடைந்திருந்தனர்.கார்த்தி காரை நிறுத்திவிட்டு பூஜைக்கான பொருளை வாங்கி கொண்டு செல்ல மித்ரா எதுவும் பேசாமல் அவனையே பின் தொடர்ந்து சென்றாள். கோவில் பூசாரியும் அவர்களை அழைத்து கொண்டு வேண்டிய பூஜைகளை செய்தார்.பூஜை நடக்கும் போது அவன் சற்றும் நிமிர்ந்து கூட அவளை பார்க்கவில்லை.பூஜை முடிந்த உடன் அவன் ஒரு திடலில் அமர்ந்தான்.

இனி எல்லாம் வசந்தமே Where stories live. Discover now