வசந்தம் 11

206 10 7
                                    

பறவைகளில் இனிமையான கூச்சலையும் கடலலையின் ஆர்ப்பரிக்கும் சத்தத்தையும் கேட்டு சூரியன் தன் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தன் செங்கதிர்களை பூமியின் மீது படர செய்தான்... மித்ரா ஜன்னல் வழியே அந்த சூரியனை வெறித்தவாறு இருந்தாள். அவள் மனதுக்குள் பல கேள்விகள் ஓடி கொண்டிருந்தது. இந்த விடியல் அவளின் வாழ்வை வளப்படுத்தவா இல்லை தன் வாழ்வை சிதைக்கவா என்ற கேள்வி அவள் மனதில் ஓடி கொண்டே இருந்தது.

மது அவள் அப்டி நின்றுப்பதை பார்த்து " மித்ரா என்ன பண்ற..டைம் ஆச்சு... போய் குளிச்சிட்டு வா... பியூட்டி பார்லர் லேடி இப்போ வந்துருவாங்க... போ.. " என்று அதட்ட அவளும் குளியறைகுள் சென்றாள். பின் அங்கு பிரியா இன்னும் எழாமல் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து பக்கத்தில் டம்ளரில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் ஊற்றினாள். அவள் பதறி எழுந்து பார்க்க மது அவளை முறைத்த வண்ணம் " எல்லாத்தையும் பண்ணிட்டு அப்டி என்ன டி தூக்கம்.. போ... போய் ரெடி ஆகு... "என்று கத்தி விட்டு சென்றாள்.

அனு ப்ரியாவை பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு "ஹா ஹா... என்ன டி காலைலயே செம டோஸ் ஆஹ்... " என்று கூறி அவள் கட்ட வேண்டிய புடவையை எடுத்து வைத்து கொண்டிருதாள். " பவானி ஆண்ட்டி உண்மையிலே சூப்பர் டி... நைட்குள்ள நம்ப எல்லாருக்கும் ப்லவுஸ்லா ஸ்டிச் பண்ணிட்டாங்க... " என்று அனு கூறி அவள் புடவையை தன் மேல் போட்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்த்து கொண்டிருதாள்.

அதை கவனித்த பிரியா " ஹே... இது வெற்றி உனக்கு செலக்ட் பண்ணது தான... " என்று கேட்டாள். அனு ஆமா என்பது போல் தலையசைக்க உடனே பிரியா புருவத்தை உயர்த்தி " ஆமா ஜெய் ஆஹ் வெறுப்பேத்த நான் வெற்றி சொன்ன கிளி பச்சை சேரிய செலக்ட் பண்னேன்... நீ ஏன் வெற்றி செலக்ட் பண்ணத எடுத்த??? " என்று கேள்வியாய் பார்க்க உடனே அனு " ஹே... கலர் நல்ல இருந்துச்சு அதான்... ஏன் டி நல்ல இல்லையா... " என்று பாவமாய் கேட்க " ம்ம்ம்... புடவைலாம் நல்லாதான் இருக்கு... மேடம் தான் சரிஇல்லையோனு தோணுது... " என்று சொல்ல உடனே அங்கிருந்து " பிரியா குளிக்க போய்டியா.. " என்று மதுவின் குரல் கேட்க பிரியா உடனே அனுவை பார்த்து உன்ன அப்றம் பாத்துக்கிறேன் என்று கூறி பாத்ரூம்குள் புகுந்தாள்.

இனி எல்லாம் வசந்தமே Donde viven las historias. Descúbrelo ahora