பார்க், பீச், ஷாப்பிங் என அந்நாளைக் கரைத்துக் களைத்து வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். மித்ராவின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது. விடுதலையைத் தேடிய தனது வாழ்க்கை வசந்தத்தை அண்மித்திருப்பதை உணர்ந்து உவகை பீரிட்டது. உள்ளத்தின் சுமை நீங்கி காதல் உணர்வுகள் நிரப்பப்பட்டதால் வந்த செழுமையும், வெட்கமும் அவளை மேலும் மெருகூட்டியது.
அன்றைய இரவு பற்றி எதிர்பார்ப்புகளுடன் வந்தவள் களைப்பில் கணவனுக்கு முன்னரே உறங்கிப் போனாள்.
"கண்மணி நீ தூங்கினதும் நல்லதுக்கு தானடி. இரு நாளைக்கு உனக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் தரேன். மெதுவாக நெற்றியில் முத்தமிட்டான். உள்ளம் உந்த கன்னங்களுக்கு முன்னேறினான். அடுத்த தரிப்பிடம் இதழ்கள். 'வேணான்டா ஆதவா. ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலியோ. பொறுமையோட இரு. அவள தூக்கத்துல கஷ்டப்படுத்தாத' தனக்கே எல்லை வகுத்தவன் தன்னையே தடுத்துக் கொண்டான்.
*****
மறுநாள் விடியல் மறுபடியும் பரபரப்பான வாரம் ஆரம்பம். ஆதவன் மித்ரா இருவரும் அலுவல்களுக்கு புறப்பட்டனர். வழமைக்கு மாறாக புறப்படமுன் அறையினுள் ஆதவன் அவள் நெற்றியை முத்தமிட்டான்.
"இன்னிக்கு என்ன புதுசா?"
"புதுசா கல்யாணம் ஆச்சு இல்ல அதான். இனிமேல் இப்படி தான்."
"ஓ.... அப்படியா. பட் ஐ ஆம் ஸாரி ஆதவ்"
"எதுக்கு இப்போ ஸாரி?"
"நைட் டயர்ட்ல தூங்கிட்டேன். ஸாரி நீங்க நிறைய ஹோப்ஸோட இருந்திருப்பீங்க"
"அட போட. நீ மட்டுமா நானும் தான் மட்டையாகிட்டேன். ஒன்னும் இல்ல இன்னிக்கு பார்த்துக்கலாம்."
"ம்ம்....."
"ஐயோ மேடத்துக்கு வெட்கம் வேறயா?" சீண்டினான் ஆதவன்.
"போங்கப்பா ஆபிஸுக்கு டயிமாச்சு" அவனையும் கிளப்பிக் கொண்டு புறப்பட்டாள்.
காரை எடுக்கச் சென்றவன் ஏதோ தோன்ற பைக்கை கிளப்பினான்.
"என்ன இன்னிக்கு பைக்?"
"சும்மா கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்குமேன்னு...."
"ஓ... சார்க்கு ரொமான்ஸ் வேற கேட்குதா? அது ஒன்னு தான் குறைச்சல்." போலியாக முறைத்தவள் பைக்கின் பின்னால் ஏறி சிறிது இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள்.
"மித்து.... மாமாவ நல்லா புடிச்சிக்கோ. நான் ஸ்பீடா போகப் போறேன்."
"சரி நீங்க வண்டிய எடுங்க"
'பாவி தள்ளி உட்காந்தது போதாதுன்னு முறைக்கிறியா. இப்ப பாரு' வண்டி படுவேகமாக கிளம்பியது. முதல் ப்ரேக்கிலேயே இடைவெளி குறைந்து விழுந்து விடாமல் இருக்க அவனை பிடித்துக் கொள்ள வேண்டியதாகிற்று.
'அப்படி வா வழிக்கு' பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்து கண்ணடித்தவன் பயணத்தை தொடர்ந்தான்.
******
மத்தியானம் லன்ச் முடித்து தனது கேபினுக்குள் வந்து பணியைத் தொடர்ந்தவளின் வேலையை சிணுங்கிய செல்பேசி இடையிட்டது. திரையில் ஆதவனின் இலக்கத்தைக் கண்டவள் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது.
"ஹலோ"
"மித்ரா.... பிஸியா இருக்கியா?"
"இல்ல சொல்லுங்க"
"உனக்கு ஒன் வீக் லீவ் போட்டுட்டு உடனே வீட்டுக்கு வரலாமா?"
"என்னங்க? என்னாச்சு? எதுக்கு ஒன் வீக்?"
"எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல. டாக்டர் ஒன் வீக் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு. நீயும் பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்."
"ஐயோ என்னாச்சுங்க?" பதறினாள்.
"இல்லாம்மா கொஞ்சம் ஜுரம்."
"சரி இப்போ நீங்க எங்க இருக்கீங்க ஆபிஸ்லயா?"
"ஆமா வீட்டுக்கு போக போறேன்"
"தனியாவா போறீங்க?"
"இல்ல ரகு என்னை ட்ராப் பண்ணுவான்"
"ஓகேமா டேக் கெயர். நான் எப்படியாச்சு பர்மிஷன் போடறேன். நான் மேனேஜர் கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்."
"மித்து... பர்மிஷன் கிடைக்குமா?"
"தெரியல திடீர்னு ஒன் வீக் கேட்டா கஷ்டம் தான். கேட்டு பார்க்கலாம்."
"ஓகே அந்த மனேஜர் நம்பர் குடு. நான் பேசுறேன்."
"நீங்க கேட்டா இன்னும் டவுட்டுங்க"
"நீ நம்பர் குடு. நான் எனக்கு ரொம்ப முடியாத மாதிரியும் உனக்கு இன்னும் எதுவும் தெரியாத மாதிரியும் பேசி ஓகே பண்றேன்."
"ஓகே நான் அனுப்புறேங்க"
******
"மித்ரா மேடம் உங்களை மனேஜர் சார் கூப்புடறார்"
'ஐயோ இந்த ஆதவ் என்ன சொல்லி தொலைச்சாரோ தெரியல. எதுவுமே தெரியாத மாதிரி காட்டிக்க வேணும்.' உள்ளுக்குள் திட்டமிட்டபடி சென்றாள்.
"சார் கூப்புட்டீங்களா?"
"மித்ரா உங்க ஹஸ்பன்ட் கால் பண்ணி இருந்தாரு. அவருக்கு உடம்புக்கு முடியல போல."
"சார் என்னாச்சு?" போலிப் பதற்றத்தை வரவைத்துக் கொண்டாள்.
"ஏதோ ஜுரம் போல. நீங்க வீட்டுக்கு போங்க. ஏதாவது முக்கியமா பார்க்க வேண்டிய ஒர்க்ஸ் இருந்தா நம்ம சந்துருவ பார்க்க சொல்லிக்கலாம். நீங்க பொறுமையா இருந்து ஹஸ்பன்ட் க்யூர் ஆனதுக்கு அப்புறமா வாங்க. ஒன் வீக் போன கூட பரவாயில்ல. அதுக்கு மேல எடுத்துக்க வேணாம்."
"ரொம்ப தாங்க்ஸ் சார். இந்த உதவிய என்னைக்கும் மறக்க மாட்டேன். "
"இதொன்னும் பெரிய விஷயம் இல்ல மிஸிஸ் ஆதவன். நீங்க எங்க கம்பனிக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்கீங்க."
"நான் என்னோட கடமையை செய்தேன் அவ்வளவு தானே சார்."
"ஓகேம்மா டோன்ட் பீ டிளேய். ஒர்க்ஸ் எல்லாம் சந்துருகிட்ட ஹான்ட்ஓவர் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க."
"ஓகே சார்"
******
அவசரத்தில் வீட்டை அடைந்தவள் பெட்டிக்குள் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த ஆதவனைக் கண்டு திடுக்கிட்டாள்.
"ஆதவ் உடம்பு எப்படி இருக்க? எங்க கிளம்புறீங்க?"
"ஸாரி மித்ரா. ஆபீஸ்ல ஒரு முக்கியமான ஒர்க். ஒன் வீக் அப்ரோட் போறேன்."
"வாட்......! உடம்பு முடியலன்னு போன் போட்டு என்னை இங்க வரசொல்லிட்டு இப்போ நீங்க கிளம்பி போரேன்னு சொல்றீங்க?
"போய் தான் ஆகணும் கண்ணம்மா. ரொம்ப இம்போர்டன்ட் டீல் ஒன்னு. மிஸ் பண்ணினா என்னோட தொழிலுக்கே ஆப்பாகலாம். நீயும் வா என் கூட."
"அதுக்காக ஜுரத்தோட ஃபாரின் போறேன்னு சொல்றீங்க. அத்தை..... மாமா..... இவரு பண்ற காரியத்தை பாருங்களேன்."
"என்னம்மா?"
"அத்தை உடம்புக்கு முடியல டாக்டர் ஒன் வீக் ரெஸட் எடுக்க சொன்னதா சொன்னாரு. இப்போ பிஸ்னஸ் விஷயமா ஃபாரின் போறேன்னு சொல்றாரு. நீங்களாச்சு வேணான்னு சொல்லுங்களேன்."
"ஆபீஸ் விஷயம்னா என்னம்மா பண்ண. போயிட்டு வரட்டும். வேணும்னா நீயும் கூட போ"
"என்ன அத்தை...நான் கூட போறதா? ஆபீஸ் டூர்க்கு எல்லாம் எங்களையும் அனுப்புவாங்களா? அதுலயும் இது என்ன ரோடுல போர பஸ் மாதிரியா? உடனே எனக்கும் டிக்கட் போட்டு தருவாங்களா?"
"உனக்கும் சேர்த்து தான் டிக்கட் தந்தாங்க. நீ விரும்பினா வரலாம். இல்லாட்டி உன் இஷ்டம்." அவளைப் பாராமலேயே ஆதவன் கூறியதில் அவள் சங்கடப்பட்டுப் போனாள்.
"அம்மா மித்ரா.... அவனுக்கு உடம்புக்கு முடியாம இருந்தும் ஃபாரின் போக சொன்னதால அவன் கோபத்துல இருக்கான்மா. அவனை பார்த்துக்க தான் உனக்கும் சேர்த்து டிக்கட் குடுத்திருக்காங்க. நீ போயிட்டு வாம்மா" விளக்கினார் தனசேகர்.
"இப்போ எப்படி மாமா? எத்தனை மணிக்கு ஃபிளைட்? நான் ஆபிஸக்கு இன்ஃபார்ம் பண்ணவும் வேணுமே."
"அதெல்லாம் நான் பார்த்து கொள்றேன் மித்ரா. ஆறு மணிக்கு ஃபிளைட். நீ பொறுமையா ரெடி ஆகி என் கூட வந்த போதும்." மென்மையாக கூறிய போதும் அவன் அவள் முகத்தை பார்க்கவில்லை.
பதில் ஏதும் கூறாமல் மெதுவாக நடந்து சென்று அவள் பயணத்திற்கான பொருட்களை தயார் செய்தாள்.
*****
சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து மேலெழுந்த விமானம் கோலாலம்பூர் நோக்கி பறக்கத் தொடங்கி சில நிமிடங்களே ஆகி இருந்தன. ஆதவனின் பக்கத்து இருக்கையை பகிர்ந்து கொண்டிருந்த மித்ரா உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகளுடன் மௌனமாக அமர்ந்திருந்தாள். மெதுவாக அவள் கையைப் பற்றினான். திரும்பி அவன் முகத்தை பார்த்தவள் மீண்டும் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.
"மித்து....."
..........
"மித்து கண்ணா....."
.........
"என்னடா கோபமா?" அவளின் முகத்தைப் பற்றி அவன் புறம் திருப்பினான்.
"ஸாரிடி மித்து பேசுடி. ஹர்ட் பண்ணாத"
"யாரு நான் ஹர்ட் பண்றேனா?"
"அதான் ஸாரி சொல்லிட்டேன்ல"
"ஸாரி சொன்னா எல்லாம் சரியாகிடுமா? உங்களுக்கு ஜுரம்னு பதறி அடிச்சி ஓடி வந்தா இப்படி பண்ணிட்டீங்களே. ஏதோ நான் தப்பு பண்ணின மாதிரி ஒழுங்கா பேச கூட மாட்டேங்குறீங்க. இதுக்கு மேல நான் என்ன பேசுறது"
"மித்து உன்னை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கலடா. உனக்கு ஸர்ப்ரைஸ் தரனும்னு நினைச்சேன். நான் கொஞ்சம் ஓவரா தான் பேசினேன். ஐ நோ பட் உன் முகத்தை பார்த்தா உண்மையை சொல்லிடுவேன். அதான் ஸாரிடி" கெஞ்சும் தோரணையில் அவளைப் பார்த்தான்.
"உண்மையா? என்ன சொல்றீங்க. எனக்கு எதுவும் புரியல."
"மித்து எனக்கு ஜுரம் இல்ல. ஐ ஆம் ஆல்ரைட். ஜுரம்னு பொய் சொல்லி உன்னை என்னோட ஃபாரின் போறதுக்காக தான் வரவைச்சேன்."
"வாட்! என்னங்க இது அநியாயம். நீங்க ஃபோன் பண்ணினதுல இருந்து என்னோட மனசு எவ்வளவு பாடு பட்டிச்சு தெரியுமா? இப்போ எல்லாம் பொய்னு சொல்றீங்க. எதுக்காக பொய் சொன்னீங்க. அட்லீஸ்ட் ஃபாரின் போகபோறேன்னு உண்மையாச்சும் சொல்லி இருக்கலாமே. அத சொன்னாலும் வந்திருப்பேனே"
"ம்ம்ம்.... சொல்லி இருக்கலாம். பட் நாங்க இப்போ ஆபிஸ் விஷயமா ஃபாரின் போகலையே" கூறியவன் கண்களில் ஒருவித குறும்பு மின்னியது.
"அப்போ அதுவும் பொய்யா? அப்போ எங்க போறோம்?" எதுவுமே புரியாதவளாய் கேட்டாள்.
"ஒரு ப்ராஜெக்ட் விஷயமா....." இழுத்தான்.
"ப்ராஜெக்ட் விஷயமாவா? இப்போ தான் ஆபிஸ் விஷயமில்லன்னு சொன்னீங்க." குழப்பம் முகத்தில் தெரிந்தது.
"ஆமா இது பர்சனல் ப்ராஜெக்ட்"
"பர்சனல் ப்ராஜெக்ட்டா?"
"அட ஆமா பொண்டாட்டி எனக்கு ஒரு வாரிசு ரெடி பண்றது பர்சனல் ப்ராஜெக்ட் தானே?"
"வாரிசு...... பர்சனல் ப்ராஜெக்ட்......ஆதவ்..." ஏதோ புரிந்தவளாய் முகம் சிவக்க தலைகவிழ்ந்தாள்.
"அடடா என் பொண்டாட்டி வெட்கபடறத பார்த்தா மக்கு மண்டைக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி விளங்குது."
"போங்க ஆதவ்..... நீங்க ரொம்ப மோசம். என்கிட்ட சொல்லவே இல்லையே"
"என் பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் ஹனிமூன்.... என்னை அநியாயத்துக்கு ஒரு மாசம் வெயிட் பண்ண வைச்ச இல்ல. அதுக்கு தண்டனை."
"அட போங்கப்பா. அத்தை மாமாகிட்ட சொல்லவும் இல்லியே."
"அதெல்லாம் சொல்லியாச்சு"
"ஆ..... அப்போ அத்தை மாமாவுக்கு தெரியுமா?"
"ஆமா"
"ஓ....... அவங்களும் மறைச்சிட்டாங்களா?"
"நான் தான் சொல்ல வேணாம்னு சொன்னேன். அப்புறம் உன் ஆபிஸ்ல கூட சொல்லியாச்சு"
"ஆதவ்.... இதுக்கு தான் மேனேஜர்கிட்ட நீங்க பேசுறேன்னு சொன்னீங்களா? எப்படி எல்லாம் ப்ளான் பண்றீங்க?" அவன் மீதிருந்த கோபம் அவளையும் அறியாது விட்டுச் சென்று அவ்விடத்தில் காதல் குடியேறி அவளை வெட்கத்தாலும் ஆச்சரியத்தாலும் அலங்கரித்தது.
"அதே அதே.... இதெல்லாம் ஓவர் நைட்ல ப்ளான் பண்ணி ரெண்டு மணி நேரத்துல செஞ்சி முடிச்சதும்மா"
"எப்படி ஆதவ்?"
"நைட் நீ நல்லா குறட்டைவிட்டு தூங்கினியா..."
"போங்க ஆதவ். அதுக்கு தான் ஸாரி சொல்லிட்டேன்ல"
"சரி விடும்மா. என்ன பேசவிடு."
"ம்ம்ம்....."
"என்னடா இப்படி நம்மள ஏமாத்திட்டு தூங்குறாளே இன்னிக்கு இப்படி தூங்கறவ நாளைக்கு ஆபிஸ் போயிட்டு வந்து டபுள் குறட்டை விடுவாளே... ஆ... அடிக்காதடி ராட்சசி.... இது ஃபிளைட் சத்தம் போட கூட முடியாதுடீ."
"என்னை கலாய்க்கிறதா இருந்தா பேசாதீங்க"
"ஓகே ஓகே இனி எதுவும் சொல்லல. ஆபிஸ் போயிட்டு வந்தா டயர்டா இருப்ப. அப்புறம் எப்படி நான் வாரிசு கிரியேட் பண்றதுன்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். அப்புறம் தான் இந்த ஐடியா வந்திச்சு. ஆன்லைன்ல டிக்கட் புக் பண்ணினேன். ஆபிஸ்ல மார்னிங் போய் பர்மிஷன் போட்டேன். உன்கிட்ட எதையுமே சொல்லாம பக்காவ எல்லாத்தையும் பண்ணி முடிச்சிட்டேன். என்ன மேடம் கொஞ்சம் கோவிச்சிட்டீங்க. பட் அதுவும் இப்போ ஓகே. இன்னும் ஒன்பது நைட் இருக்கு. நிறைய டைம் இருக்கு."
"ஒன்பது நைட்டா?"
"யெஸ் டென் டேயிஸ் டூர்ம்மா இது."
"ஓ...."
"கண்ணை கொஞ்சம் குறைச்சி விரிக்கலாம் இல்லை. அந்த கண் விரியிறத பார்த்தா இப்பவே என்னை வா வா ன்னு கூப்புட்ற மாதிரி இருக்கு."
"போங்க ஆதவ்." செவ்வானமாய் சிவந்தவளின் கைகளை இழுத்து மெதுவாய் முத்தமிட்டான்.
அவன் தோள்களில் ஆதரவாய் சாய்ந்து நிம்மதியுடன் கண்மூடினாள். அவளின் கனவுகளை சுமந்து காற்றைக் கிழித்துப் பறந்தது அந்த ஏர்ஏசியா விமானம்
அவளுக்கான விடியலை நோக்கி.
விடியலில் இருந்து பயணம் தொடரட்டும் மகிழ்ச்சியுடனே...
YOU ARE READING
விடியலை நோக்கி
Romanceதிருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான்...