💞 23 💞

4.2K 232 26
                                    

மானசியின் மனதை அறிந்து கொள்ளும் வண்ணம் பேசாமல்.. அவள் அறிந்திராத அறியக்கூடாத விஷயங்களை பேசி.. இல்லை உளறிக்கொட்டி அவளை வருத்தப்பட வைத்துவிட்டதை எண்ணி வருந்தியபடியே வீட்டுக்கு வந்தான் தீபக்.

“என்னடா என்னாச்சு.. மானசி என்ன சொன்னா..” என ஆவலாக கேட்டார் யசோதா.

“எல்லாம் சொதப்பிடுச்சு ம்மா..” என பாவமாக சொன்ன தீபக்.. மத்த விஷயங்களையும் சொன்னான்.

“டேய் என்னடா இப்டி பண்ணி வச்சிருக்க.. மானசி பாவம் டா..” என யசோதா தீபக்கிடம் சொல்லிக் கொண்டிருக்க.. அப்போது வீட்டுக்குள் வந்த வாசுதேவன் இருவரையும் முறைத்து பார்த்தார்.

என்னவென புரியாமல் யசோதாவும் தீபக்கும் விழிக்க.. “அந்த குடும்பத்துக்கும் நமக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை..” என்றார் வாசுதேவன்.

“எ.. என்ன சொல்றீங்க..” என யசோதா.. கேட்க.. தீபக்கை பார்த்த வாசுதேவன்.. “இந்த கல்யாணம் நடக்காது.. அந்த குடும்பத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என அழுத்தமாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அஞ்சலி சொன்ன பிறகே மானசியின் விருப்பம் குறித்து யோசிக்காமல் பேசிவிட்டோமே என எண்ணினான் உதயா.

“சாரிடா.. நா.. நான் இதைப்பத்தி யோசிக்கலை.. நான் மாமா கிட்ட திரும்ப பேசி பார்க்கிறேன்..” என உதயா சொல்ல.. ஓடிவந்து அவன் மடியில் முகம் புதைத்து அழுதாள் மானசி.

“அழாத டா.. நான் தான் மாமா கிட்ட பேசுறேன்னு சொல்றேன்ல..” என அவள் தலையை வருடினான் உதயா.

“உதய் மாமா கிட்ட பேசுவான் டா.. மாமா புரிஞ்சுப்பாங்க..” என ரவிச்சந்திரன் ஆறுதலாக சொன்னார்.

“அழாத டா.. உதி பேசுனா அண்ணன் கேட்பாங்க..” என சமாதானம் சொன்னார் சாரதா.

யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் மானசி அழுது கொண்டேயிருந்தாள்.

தான் அந்த வீட்டுக்கு வந்தது முதல் தனக்கு ஒரு தங்கை போல.. தோழி போல.. குழந்தைத்தனமாக நடந்து கொண்ட மானசியின் அழுகை.. அஞ்சலியை தன் வாழ்வை பற்றி கூட எண்ணவிடாமல் செய்தது.

வரம் நீயடி..Waar verhalen tot leven komen. Ontdek het nu