"வரு, இந்த ஃபோட்டோவை என் கிட்ட இருந்து திரும்ப வாங்கிக்காதடா, என் கிட்டயே பத்திரமா இருக்கட்டுமே?..... ப்ளீஸ்!" என்று கெஞ்சலாக கேட்டவனின் சட்டையை கோபத்தில் கொத்தாக பற்றியிருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"உன் கிட்ட எதுக்குடா என்னோட ஃபோட்டோ இருக்கணும்? நீ தான் எனக்கு நல்ல பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும்ன்னு சொல்றல்ல..... அப்போ எப்படியும் நான் இன்னொருத்தனுக்கு வொய்ப் ஆகணும்ல; அப்புறம் எப்படி என் போட்டோவை நீ உரிமையா வச்சுட்டு இருக்க முடியும்? என் கிட்ட குடுடா!" என்று அவன் பாண்ட் பாக்கெட்டில் கை வைத்தவளை, "ஒரு நிமிஷம் பொறுமையா இரு வரு! உன் கோபம் எனக்கு புரியுது. இப்போ என்ன? நான் உன்னோட போட்டோவை வச்சிருக்க கூடாது! அவ்வளவு தானே? இந்தா!" என்று அரை மனதுடன் ஒரு முறை ஃபோட்டோவை வருடி விட்டு அவளிடம் நீட்டினான் சிவ மித்ரன்.
அவனிடம் அதை பிடுங்கியவள் சட்டென்று அதை துண்டு துண்டாக கிழித்து கீழே வீசி எறியவும் மித்ரனின் கோபம் எல்லை கடந்தது. அவனது கோபத்தின் தீவிரம் ஐஸ்வர்யாவின் கன்னத்தில் கைத்தடம் பதியும் அளவில் பளார் என்ற சத்தத்துடன் அறையாக மாறியிருந்தது.
கன்னத்தை கையால் தாங்கிக் கொண்டு இருந்தவளை இழுத்து அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான் சிவ மித்ரன். புரியாத பாவனையுடன் நின்று கொண்டு இருந்தவளிடம், "எனக்கு புரிய வைக்க தான் நீ இதெல்லாம் செஞ்சன்னா..... எனக்கு புரிஞ்சுடுச்சு வரு! எப்போ உன் போட்டோவை உரிமையா எடுத்து என் பர்ஸ்ல வச்சுக்கிட்டேனோ.. அப்போலேர்ந்து; நான் உன்னை காதலிக்கிறேன். தேவையில்லாம இனிமேல் நான் ரொம்ப யோசிக்க போறது இல்லை. உன்னை சந்தோஷமா வச்சிருந்தா போதும்! நானும், ஸாரும் சந்தோஷமா இருப்போம். ஆனாலும் எனக்கு உன் மேல ரொம்ப கோபம் வரு! போட்டோவை கிழிச்சுட்டியே......!" என்று ஆதங்கத்துடன் கேட்டு கீழே சிதறியிருந்த கிழிந்த துண்டுகளை சேகரித்தவனிடம்,
"நான் ஒரு பிஸினஸ் மேனோட பொண்ணு; பார்க்க கொஞ்சமே.... கொஞ்சம் அழகா இருக்கேன், நல்ல டான்ஸர், என் அக்கவுண்ட்ல நிறைய பணம் இருக்கு, என் கிட்ட நிறைய சொத்துக்கள் இருக்கு.... எக்ஸட்ரா எக்ஸட்ராவுக்காக எல்லாம் என்னை ஒரு பையன் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைச்சேன் மித்து! அதனால தான் மாமா கிட்ட இங்க வந்ததும் என்னை பத்தின விஷயம் எதையும் யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி வச்சிருந்தேன். ஆனா அப்பா, அம்மா எனக்கு உன்னை லைஃப் பார்ட்னரா சூஸ் பண்ணினாங்கன்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியாது. அவங்க நினைச்சிருந்தா பிஸினஸ் பிரண்ட்ஸ் சர்க்கிள்ல எனக்கு சூட் ஆகிற பையனை செலக்ட் பண்ணி இருக்கலாம்ல மித்து? அதை ஏன் செய்யல? அம்மாவும், அப்பாவும் உன் டிக்னிட்டி, செல்ஃப் ரெஸ்பெக்ட் எல்லாத்தையும் கேள்விப்பட்டு தான் மாமா கிட்ட ப்ரப்போஸல ஓகே பண்ணியிருப்பாங்க. ஆனா அப்பா, அம்மாவோட இழப்பு என் வாழ்க்கையை அப்படியே ஃப்ரீஸ் பண்ணிடுச்சு. கொஞ்ச நாளைக்கு எதையுமே யோசிக்க முடியல. யார் கிட்டயும் பேச பிடிக்கல. அப்போ யார் தோள் வளைவிலயாவது சாய்ஞ்சு அழுதா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. பட் எனக்கு தெரியாதே...... அந்த தோளுக்கு சொந்தக்காரன் இண்டியாவில இருக்கான்னு...... தெரிஞ்சு இருந்தா இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வந்துருப்பேன். அப்ப்ப்ப்பா..... ரொம்ப வலிக்குற மாதிரி அடிச்சிட்ட மித்து! ஒரு நிமிஷம் இரு!" என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டு வந்தவள் கையில் அவளின் புகைப்படம் இருந்தது.
YOU ARE READING
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
Romanceஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...