💖 வஞ்சி மனம் 14

4.1K 188 27
                                    

அருள்மொழியும், மித்ரனும் நேத்ரன் கூறிய முகவரியை தேடி வீட்டிற்கு சென்று சந்திரதாராவை பார்த்த போது மித்ரன் இரண்டு நிமிடம் தான் அந்த வீட்டிற்குள் நின்று கொண்டு இருந்தான். அதற்கு மேல் அவனால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியவில்லை. சட்டென்று வீட்டுக்கு வெளியே சென்று பக்கவாட்டில் இருந்த திண்டில் அமர்ந்து கொண்டான். அவன் கண்கள் கலங்கி இருட்டிக் கொண்டு வந்தது. யாரோ மூச்சுக் குழலைப் பிடித்து நெறிப்பது போல் சுவாச மண்டலம் காற்றுக்கு தவித்தது. தலை பாரமாக இருப்பது போல் தெரிந்தது. மொத்தத்தில் மித்ரனின் புலன்கள் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன்போக்கில் இயங்கிக் கொண்டு இருந்தன.

அருள்மொழி அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரது மொபைலில் நேத்ரனுக்கு அழைத்து சந்திரதாராவின் காதில் போனை வைக்குமாறு சொல்லி விட்டு அவர்களை பார்த்துக் கொண்ட பணிப்பெண்ணிடம் அலைபேசியை நீட்டினார்.

அவர் அருள்மொழியை ஓர் எடை போடும் பார்வையுடன் நோக்கி விட்டு, அவர் முதலில் போனில் பேசினார். மறுமுனையில் இருந்து பேசுவது நேத்ரன் தான் என்று அவருக்கு நம்பிக்கை வந்த பின்னரே சந்திராவின் காதில் போனை வைத்தார்.

"அம்மா நேத்ரன் பேசுறேன்!" என்ற தன் மகனின் குரலில் மென்னகையுடன், "சொல்லு நேத்ரா; என்னப்பா நீ அனுப்பி வைச்ச ரெண்டு கெஸ்ட்ஸ் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க!" என்று மகனிடம் கேட்டவர், அருள்மொழியை அமரச் சொல்லி விட்டு, "மங்கா ஏதாவது சாப்பிடுறதுக்கு கொண்டு வாம்மா, இன்னொரு ஸார் எங்க? அவரையும் உள்ள கூட்டிட்டு வா!" என்று சொன்னார்.

அலர்மேல் மங்கை சந்திராவின் அருகில் இருந்து நகராமல், "அதெல்லாம் சாப்பிட்டு தான் வந்துருப்பாங்க! எதுக்கு தம்பி இல்லாதப்போ வூட்டுக்கு வந்துருக்காங்கன்னு கேளுங்க. யோவ் வெளியே இருக்கிற இன்னொரு ஆளை நீயே போய் கூட்டிகினு வாய்யா!" என்று அருள்மொழியை பார்த்து சொன்னார்.

வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔Donde viven las historias. Descúbrelo ahora