அன்று அதிகாலை பயிற்சி வகுப்பிற்கு மித்ரன் தயாராகி வந்தான். குழந்தைகள் அனைவரும் அதற்குள் அவரவர் நிற்கும் பொஸிஷனில் சரியாக வந்து நின்று வார்ம் அப் செய்து முடித்திருந்தனர்.
யானையின் பக்கத்திலயே நிற்கும் பாகன் போல் எல்லாம் மித்ரன் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது நடந்து கொள்வதில்லை. தனி மனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு இவை இரண்டும் பிள்ளைகள் அவர்களாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பான். எங்கேனும் ஏதாவது மாணவன் தவறு செய்தால் மட்டுமே அவர்கள் அருகில் சென்று திருந்துவான். மற்றபடி யோக பயிற்சி மேற்கொள்ளும் முன் உடம்பை தயார் படுத்தும் நிலைக்காக எல்லாம் மித்ரன் கண்காணிப்பு வேலையை மட்டும் தான் செய்து கொண்டிருப்பான்.
சிறுவர்கள் வார்ம் அப் முடித்து விட்டு ஆர்வமாக மித்ரனை பார்க்க அவன் அவர்களிடம் புன்னகையுடன், "இன்னிக்கு ஆஷாவும், ரோகேஷூம் ப்ராப்பரா வொர்க் அவுட்ஸ் எல்லாம் செஞ்சாங்க. ஸோ அவங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஃபைவ் பாயிண்ட்ஸ். ஓகேவா?" என்றதும் சிறுவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் மினி டைரியில் மித்ரன் சொன்ன நபர்களின் பெயருக்கு நேராக மதிப்பெண்களை எழுதிக் கொண்டனர். இதுவும் மித்ரன் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் கண்டுபிடித்த ஒரு வழி தான். ஒவ்வொரு நாளும் நன்றாக செய்யும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி மாத இறுதியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஒரு பரிசுப் பொருளை வாங்கித் தருவான். அந்த ஆர்வத்தில் தான் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு நன்றாக செயல்பட்டனர்.
VOUS LISEZ
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
Roman d'amourஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...